

யாஷ் வில்லனாக நடித்து வெளிவந்த மிக பிரம்மாண்டமான திரைப்படமான ராமாயணா - முதல் பாகம் , மிகப்பெரிய வெற்றியை பெற்று பாக்ஸ் ஆபீஸில் ₹1500 கோடிகளை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு நேர்காணலில் நடிகர் யாஷ் தான் திரைப்படத்தில் நடிக்க வந்ததற்கு யார் காரணம்? என்பதையும் குறிப்பிட்டுள்ளார். கன்னட திரை உலக நடிகரான யாஷ் , தான் திரைக்கு வர காரணமாக தமிழ் சினிமாவை சேர்ந்த பெரிய இயக்குனரை குறிப்பிட்டுள்ளார்.
கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த யாஷ், தொடக்க காலத்தில் பல தமிழ் சினிமாவின் கன்னட ரீமேக்களில் நடித்து பெயர் பெற்றார். கேஜிஎஃப் திரைப்படம் அவரது ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது. 20-30 கோடி ரூபாய் வசூலை பெற்றாலே மிகப்பெரிய சாதனையாக கன்னட சினிமாவில் பார்க்கப்படும். அப்படிப்பட்ட சூழலில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் முதல் முதலாக ₹100 கோடி வசூலையும் தாண்டி ₹250 கோடி வசூலை வாரிக் குவித்து சாதனையும் செய்தது.
அதனைத் தொடர்ந்து கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி, ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் மலைக்கும் அளவிற்கு ₹1200 கோடி வசூலை குவித்தது. பல தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இன்னும் நெருங்காத அந்த சாதனையை யாஷ் குறுகிய காலத்தில் செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் யாஷ் ஒரு சமீபத்திய நேர்காணலில் தான் திரை உலகிற்கு உள்ளே வந்ததைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படத்தை பார்த்த பின்பு தான் , யாஷிற்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துள்ளது. அந்த ஒரு திரைப்படம் யாஷின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. யாஷ் பெங்களூர் நகருக்கு வந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அவர் , சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பினை முதலில் பெற்றார். அதன் பின்னர் தனது தொடர் முயற்சியின் காரணமாக பெரிய திரையில் துணை நடிகராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். விரைவிலேயே தனது திறமையின் மூலம் வெற்றிகரமான நடிகராக மாறிய அவருக்கு, கேஜிஎஃப் திரைப்படம் நாடு முழுக்க பெரிய பிரபலத்தை பெற்று கொடுத்தது.
யாஷ் தான் கதாநாயகனாக மாறுவதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ஷங்கர் தான் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு நிகழ்ச்சியின் போது எதார்த்தமாக அவர் ஷங்கரை நேரில் சந்தித்தபோதும் இதைக் கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளார். யாஷின் பேச்சைக் கேட்ட ஷங்கர் மிகவும் ஆச்சர்யமடைந்துள்ளார். ஒரு கன்னட மனிதனின் வாழ்க்கையை , ஒரு தமிழ் திரைப்படம் உத்வேகமாக இருந்து மாற்றி உள்ளது.
தற்போது யாஷ் , ராமாயண திரைப்படத்தின் பெரிய வெற்றியில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, யாஷ் மிகவும் தயங்கி இருக்கிறார். ஆனால், படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் , ரசிகர்கள் அவரை கொண்டாடுவதை பார்த்தும் மிகவும் பூரிப்பில் இருக்கிறார். அவரது மிரட்டலான நடிப்பிற்கு இந்தியாவையும் தாண்டி சர்வதேச அளவில் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது.