Actor Yash.
Actor Yash.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ்!

Published on

பிரபல மலையாள இயக்குனர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எஃப் யஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் வேட்டை நடத்திய படம் கே.ஜி.எஃப். கே.ஜி.எஃப் படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து,கே.ஜி.எஃப் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் நடிகர் யஷிற்கு தனி அடையாளமாக மாறியது. அதே நேரம் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்திற்கு பிறகு நடிகர் யஷ் எந்த படங்களுக்கும் ஒப்பந்தமாகாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் பிரபல பெண் இயக்குனரான கீது மோகன் தாஸ் உடன் இணைந்து தனது 19 ஆவது படத்தில் நடிகர் யஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள திரையில் முன்னணி நடிகராக விளங்கிய கீது மோகன் தாஸ், லையர்ஸ் டைஸ், மூத்தோர் ஆகிய திரைப்படங்களை இயக்கி முக்கிய இயக்குனராகவும் மாறினார். இவரது கணவர் ராஜீவ் ரவியும் மலையாள திரை உலகின் முன்னணி இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கீது மோகன் தாஸ் இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக கே.ஜி.எஃப் புகழ் யஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், படத்தின் டைட்டில் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
கே.ஜி.எஃப்.3 படத்தில் யஷ் நடிப்பாரா?
Actor Yash.

கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்திற்கு பிறகு நல்ல கதை கிடைக்காததால் வரும் கதைகளை தொடர்ச்சியாக நடிகர் யஷ் மறுத்து வந்ததாகவும், கீது மோகன் தாஸ் கதை தனித்துவமானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் இருந்ததால் இக்கதைக்கு நடிகர் யஷ் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத் திரைப்படம் பன் இந்தியா திரைப்படமாக உருவாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இத்திரைப்படம் நடிகர் யஷிற்கு மற்றொரு அடையாளமாக மாறும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com