கே.ஜி.எஃப்.3 படத்தில் யஷ் நடிப்பாரா?

கே.ஜி.எஃப்.3 படத்தில் யஷ் நடிப்பாரா?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். இந்தப் படத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தென்னிந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி கே.ஜி.எஃப்.2 திரைப்படம் வெளியாகி, இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதோடு, இந்தியாவில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையையும் இது பெற்றது.

இந்த நிலையில் அந்தப் படத்தின் ‘சீக்குவல்’ எனப்படும் அடுத்தடுத்த விஷயங்களை ஐந்து பாகங்களாக எடுக்க அந்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதோடு, ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் வெவ்வேறு நடிகர்களை வைத்து இந்த ஐந்து பாகங்களையும் எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வரும் 2025ம் ஆண்டு எடுக்கப்படவிருக்கும் கே.ஜி.எஃப்.3 படத்தில் நடிகர் யஷ் இடம் பெறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் யஷ்ஷை சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடிக்க வைக்கவிருப்பதாகவும், அது கே.ஜி.எஃப்.- சலார் படங்களுக்கு இடையேயான ஒரு கனெக் ஷனை ஏற்படுத்தும் திட்டம் எனவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இதனால் சலார் படத்திலும் யஷ்ஷை அவரது ரசிகர்கள் பார்த்துக் கொண்டாடலாம் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கே.ஜி.எஃப்.3 திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு துவங்கி, 2026ம் ஆண்டில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், ஜூனியர் என்.டி.ஆரின் படம் ஒன்றையும் பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாகத் தகவல்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும், ‘சலார்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. கே.ஜி.எஃப். 2 படத்துக்கு இசையமைத்த ரவி பசுரூர் மற்றும் ஒளிப்பதிவாளர் புவன் கௌடா ஆகியோர்தான் 'சலார்' படத்திலும் பணியாற்றுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com