வடிவேலுவை சம்பளத்தில் முந்திய யோகி பாபு... ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?

Yogi Babu
Yogi Babu

முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபுவின் ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. காமெடி நடிகர்களாக கலக்கி கொண்டு இருந்த சந்தானம், சூரி, ஆகியோர் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார்கள் என்பதால் யோகி பாபுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது யோகி பாபு GOAT, இந்தியன் 2, காதலிக்க நேரமில்லை, உள்ளிட்ட பல பெரிய படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.

தொடர்ச்சியாக இதனை தவிரவும் பல படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி வருகிறார். யோகி பாபுவின் நடிப்பில் அடுத்ததாக கங்குவா, GOAT, அந்தகன் என ஏராளமான படங்கள் வரவிருக்கின்றன. இன்றைய தேதியில் அதிக பிஸியான நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் யோகி பாபு.

சம்பள விஷயத்திலும் கூட அவர் தான் அடுத்ததாக நடிக்கும் படங்களுக்கு சற்று உயர்த்தி கேட்டு வருகிறாராம். இதுவரை ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் சம்பளமாக யோகி பாபு 10 லட்சம் தான் அதாவது ஒரு நாள் கணக்கு படி 10 லட்சம் சம்பளம் வாங்கினாராம். எத்தனை நாள் கால்ஷீட் கேட்டு நடித்து கொடுக்கிறாரோ அதற்கு ஏற்றது போல சம்பளத்தை வாங்கி வந்தாராம்.

இதையும் படியுங்கள்:
"அது நான் இல்ல" நடிகை ஷாலினி போட்ட ஷாக் போஸ்ட்!
Yogi Babu

ஆனால், தற்போது அதிக அளவில் பட வாய்ப்புகள் வருகிறது என்ற காரணத்தால் தனது ஒரு நாள் சம்பளத்தை 12 லட்சமாக உயர்த்தி இருக்கிறாராம். தன்னிடம் தேடி வரும் தயாரிப்பாளர்களிடமும் தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கூறிவிடுகிறாராம். குறைத்து பேசினால் கூட 10 லட்சம் இருந்தால் மட்டும் தான் படத்தில் நடிக்கவே சம்மதம் தெரிவிக்கிறாராம். அது மட்டுமின்றி, ஒரு படத்தில் நடிக்க பணம் வாங்கிவிட்டு அடுத்ததாக அதே கால்ஷீட்டை வேறு படத்திற்கும் கொடுத்து விடுகிறாராம்.

இது மட்டுமின்றி, கமிட் ஆகி நடித்து வரும் படங்களை தவிர்த்து நடித்து முடித்து இருக்கும் பாதி படங்களுக்கு டப்பிங் பேசாமலும் யோகி பாபு இருக்கிறாராம். இந்த தகவல் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com