"அது நான் இல்ல" நடிகை ஷாலினி போட்ட ஷாக் போஸ்ட்!

Shalini ajithkumar
Shalini ajithkumar

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி பெயரில், போலி ட்விட்டர் கணக்கு ஓப்பன் செய்து, ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றிய மர்ம நபர் குறித்து ஷாலினி எச்சரித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தான் ஷாலினி. இவர் மட்டும் இன்றி இவரின் சகோதரர் ரிச்சர்ட், தங்கை ஷாமிலி ஆகிய அனைவருமே குழந்தையாக நடிப்பில் கால் பதித்து அசத்தினர். ஷாலினி தமிழ் படங்கள் மட்டும் இன்றி ஏராளமான மலையாள படங்கள், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதே போல், பருவ வயதை எட்டிய பின்னர், ஷாலினி ஹீரோயினாக மலையாளத்தில் அறிமுகமானார்.

தமிழில் இயக்குனர் பாசில் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்த மினி என்கிற கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் இவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றி பட நாயகியாக அறியப்பட்ட ஷாலினி, இதை தொடர்ந்து அஜித்துடன் அமர்க்களம், மாதவனுக்கு ஜோடியாக அலைபாயுதே, பிரஷாந்துடன் பிரியாத வரம் வேண்டும் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே தல அஜித்துடன் ஏற்பட்ட காதலால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக விலகிய ஷாலினி, சமூக வலைத்தளங்களில் கூட பல வருடங்களாக தலை காட்டாமல் இருந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக தான் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி அதன் மூலம் தன்னுடைய குடும்பம் குறித்த சில புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இதையும் படியுங்கள்:
தம்பிக்கு கார் பரிசளித்த ராகவா லாரன்ஸ்..!
Shalini ajithkumar

இந்நிலையில் ஷாலினியின் பெயரை தவறாக பயன்படுத்தும் விதத்தில், இவரின் பெயரில் போலி எக்ஸ் பக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளார் மர்ம நபர் ஒருவர். ஷாலினியின் எக்ஸ் பக்கம் என நம்பி இவரை சுமார் 80.1K ஃபாலோவர்ஸ் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த தகவல் ஷாலினியின் கவனத்திற்கு வர, இதுகுறித்து எச்சரிக்கும் விதமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலியான எக்ஸ் பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்-ஐ பதிவு செய்து இது தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கம் இல்லை என்றும், எனவே இதை யாரும் ஃபாலோ செய்ய வேண்டாம் என ரசிகர்களை எச்சரிக்கும் விதத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com