காளிதாஸ் - அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான போர் பட டீசர் வெளியீடு!

போர் பட டீசர்
போர் பட டீசர்

அர்ஜுன் தாஸ் - காளிதாஸ் நடிப்பில் உருவாகியுள்ள போர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் போர் திரைப்படம். இந்த படத்தில் கலக்கல் நடிகர்களான அர்ஜுன் தாஸும், காளிதாஸும் இணைந்து நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வரும் இந்த படம் தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் இந்திப் பதிப்பில், ஹர்ஷ்வர்தன் ராணே, எஹான் பட் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் போஸ்டர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது.

ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கும், காளி தாஸுக்கும் இடையே போர் நடைபெறுகிறது. கல்லூரியில் நடைபெறும் சண்டை போல் இருப்பதால் இந்த படம் இளைஞர்களை வெகுவாக கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கார் ரேஸ் பிரச்சனை, நண்பர்கள் சண்டை என கல்லூரி நினைவுகளுக்கு அழைத்து செல்கிறது.

எவ்வளவு நாள் தான் எங்களை கீழே வைச்சிட்டே இருப்பீங்க என்று டீசரில் இடம்பெற்றுள்ள வசனம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 2 நாயகர்களும் தனித்தனியாக ஹிட் படங்களை கொடுத்து தனித்துவமான இடத்தை பிடித்து வைத்திருப்பதால், இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com