சென்னையை புரட்டி எடுத்த மிக்ஜாம்... தாமாக முன்வந்து நிவாரண தொகை அறிவித்த நடிகர்கள்!

surya - karthi
surya - karthi

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சென்னையில் வெள்ளப்பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், நடிகர்கள் சூர்யா, கார்த்தி நிவாரண தொகையை அறிவித்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை கொட்டிதீர்த்தது. இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதுவரை புயல் பாதிப்பால் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பல இடங்களில் மின்சாரம் இன்றி, உணவு இன்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதில் முதன்முறையாக தாமாகவே முன்வந்த நடிகர்கள் கார்த்தி, சூர்யா நிவாரண தொகையை அறிவித்துள்ளனர். இருவரும் மழை பாதிப்புக்காக ரூ.10 லட்சம் அளிக்கின்றனர். இந்த உதவி தொகை ரசிகர் மன்றம் மூலமாக நேரடியாக பாதிக்கப்பட்டோரை சென்றடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நடிகர் சூர்யா அகரம் ஃபௌண்டேஷன் மூலமாக பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இந்த நிலையில் மழை பாதிப்புகள் அடங்குவதற்கு முன்னரே நிவாரண உதவி அறிவித்துள்ளதால் பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com