மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கும் குஷ்பு; ரஜினி பட வில்லனுடன் ஜோடி!

மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கும் குஷ்பு; ரஜினி பட வில்லனுடன் ஜோடி!

பிரபல நடிகை குஷ்பு மீண்டும் பாலிவுட்டில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவிலும், அரசியலிலும் சரிசமமாக கலக்கி வரும் நடிகை குஷ்பு, அரசியலில் பிஸியாக இருந்தாலும் உடம்பை பிட்டாக வைத்து சினிமாவில் கான்சண்ட்ரேட் செய்து வருகிறார். இவரது தயாரிப்பில்தான், இவரது கணவர் இயக்கத்தில் உருவாகும் அரண்மனை 4 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

நடிகை குஷ்பு தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஜர்னி (Journey) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, ‘கதர் 2’ படத்தை இயக்கிய அனில் ஷர்மா இயக்குகிறார். இந்தப் படத்தில் நானா படேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் இந்தி படத்தில் நடித்து 35 ஆண்டுகளாகி விட்டன. ‘ப்ரேம் தான்’ படத்தின் படப்பிடிப்பு 1989ல் நிறைவடைந்தது. இப்போது நான் முற்றிலும் புதியவராக உணர்கிறேன். நானா படேகருடன் இணைந்து நடிப்பது எனக்கு உற்சாகமளிக்கிறது. அவர் மிகப்பெரிய நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது நான் தென்னிந்திய திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் என்னால் இந்தி படங்களில் நடிக்க முடியவில்லை. அழுத்தமான கதாபாத்திரம் கொண்ட ஒரு படத்துடன் இந்தியில் மீண்டும் நடிப்பதை முக்கியமாகக் கருதுகிறேன்” என்றார்.

இதையும் படியுங்கள்:
‘காட்ஸில்லா அண்ட் தி காங் - ஒரு புதிய சாம்ராஜ்யம்’ திரைப்பட டிரெய்லர் - 2 வெளியீடு!
மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கும் குஷ்பு; ரஜினி பட வில்லனுடன் ஜோடி!

குஷ்பு தமிழில் அறிமுகமாகும் முன்பு 1980ல், தனது 8வது வயதில், ‘தி பர்னிங் ட்ரெய்ன்’ என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக பல இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்தியில் கதாநாயகியாக சில படங்களில் நடித்த பின்பே 1988ல் ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com