‘காட்ஸில்லா அண்ட் தி காங் - ஒரு புதிய சாம்ராஜ்யம்’ திரைப்பட டிரெய்லர் - 2 வெளியீடு!

'Godzilla and the Kong - A New Empire' Movie Trailer - Release 2
'Godzilla and the Kong - A New Empire' Movie Trailer - Release 2https://www.youtube.com

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான திரைப்படங்கள் வரிசையில் காட்ஸில்லா மற்றும் கிங் காங் ஆகிய திரைப்படங்கள்தான் முதன்மை வகிக்கின்றன. இதுபோன்ற கதைகளுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருப்பது வழக்கம்தான். ஏனென்றால், இது மாதிரியான கதைகள் எல்லாம் சினிமா ரசிகர்களை எளிதில் கவர்ந்திழுக்கும் சக்தியுடையவை. இந்நிலையில், ‘காட்ஸில்லா அண்ட் தி காங் - ஒரு புதிய சாம்ராஜ்யம்’ என்ற திரைப்படத்தின் முதலாவது டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், தற்போது இரண்டாவது டிரெய்லரையும் அப்படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

காட்ஸில்லா – கிங் காங்: காட்ஸில்லா மற்றும் கிங் காங் என இந்த இரண்டு கதையையும் ஒன்றாக இணைத்து உருவாக்கியதுதான் காட்ஸில்லா அண்ட் தி காங் - ஒரு புதிய சாம்ராஜ்யம் திரைப்படம். முதன்முதலில் காட்ஸில்லா vs காங் என்ற திரைப்படம்தான் இவ்விரண்டையும் ஒன்றாக இணைத்து எடுக்கப்பட்ட படமாகும். ஆனால், இப்படத்தில் இவர்கள் இருவரும் எதிரெதிராக நின்று பிறகு படத்தின் கிளைமேக்ஸில் நண்பர்களாக மாறி வில்லனை எதிர்த்து சண்டையிட்டு வெற்றி காண்பது போன்ற கதைக் களத்தோடு அத்திரைப்படம் அமைந்திருந்தது.

பிரபஞ்சத்தின் காவலர்கள்: காட்ஸில்லா மற்றும் கிங் காங் இவ்விரு திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்ற திரைப்படங்களாகும். இந்த இரண்டு மான்ஸ்டர் கதாபாத்திரமும் உலகிற்கு ஆபத்து ஏற்படும்பொழுதெல்லாம், பூமிக்கு வந்து அந்த ஆபத்திலிருந்து மீட்கும் ஒரு காவலர்களைப் போலவே நமக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
மெகா ஸ்டார் மம்முட்டியின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பிரமயுகம்!
'Godzilla and the Kong - A New Empire' Movie Trailer - Release 2

நண்பர்களாக காட்ஸில்லா மற்றும் காங்: பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வந்த பின்னர் இருவரும் அவரவர் இருப்பிடத்தை நோக்கி சென்றுவிட்டனர். ஆனால், இப்போது புதிதாக மீண்டும் ஒரு பிரச்னை உருவாகியுள்ளது. எனவே, இந்தப் பிரச்னையையும் காட்ஸில்லா மற்றும் காங் இருவரும் நண்பர்களாக இணைந்து அதனை எதிர்கொள்வது மாதிரியான கதைக்களத்தை இப்படத்தில் அமைந்துள்ளனர் என்பது படத்தின் டிரெய்லர் மூலம் நமக்குத் தெரியவருகிறது. இந்நிலையில்தான், காட்ஸில்லா அண்ட் தி காங் - ஒரு புதிய சாம்ராஜ்யம் திரைப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com