'மயிலிறகே' பாடலில் வரும் நடிகை நிலாவை நியாபகம் இருக்கா? 40 வயதில் திருமணம்... வைரலாகும் போட்டோஸ்!

Actress Meera Chopra
Actress Meera Chopra

எஸ்.ஜே.சூர்யாவுடன் மயிலிறகே பாடலில் அழகாக நடனமாடி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த நடிகை நிலா தனது 40 வயதில் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவர் நடிகை நிலா. பாலிவுட்டில் மீரா சோப்ரா என்ற பெயரில் அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்துள்ள நிலா, கடந்த 3 ஆண்டுகளாக ரக்ஷீத் என்பவரை காதலித்து வந்தார். 40 வயதான போதிலும் திருமணம் செய்யாமல் இருந்த அவர் தற்போது நீண்ட நாள் காதலரான ரக்ஷீத்தை திருமணம் செய்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான மீரா சோப்ரா அந்த அடையாளத்துடனேயே படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் நடித்த நிலா, இறுதியாக கில்லாடி என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் படங்களில் அவர் நடிக்கவில்லை. பாலிவுட்டில் படங்களில் நடித்துவந்த நிலையில் தற்போது தன்னுடைய திருமணத்தை முடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
மாஸ் ஹீரோவாக உருவெடுக்கும் சிவகார்த்திகேயன்... ரசிகர்களை சந்தித்த பிரம்மாண்ட நிகழ்வின் வீடியோ வைரல்!
Actress Meera Chopra

இவரின் திருமணம் குறித்து கடந்த மாதமே அறிவித்திருந்தார். இந்த நிலையில், ராஜஸ்தானின் பிரபலமான ரிசார்ட் ஒன்றில் இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இனிமேல் மகிழ்ச்சி, சண்டை, சிரிப்பு, கண்ணீர் மற்றும் நினைவுகள் தன்னுடைய வாழ்க்கையில் அதிகமாக இருக்கும் என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com