மாஸ் ஹீரோவாக உருவெடுக்கும் சிவகார்த்திகேயன்... ரசிகர்களை சந்தித்த பிரம்மாண்ட நிகழ்வின் வீடியோ வைரல்!

Sivakarthikeyan
Sivakarthikeyan

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அவரது ரசிகர்களை சந்தித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பேசும் பொருளாகியுள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். கோலிவிட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் குதித்துள்ளதால், இவர் இடத்தை அடுத்து யார் நிரப்புவார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளது.

பலரும் சிவகார்த்திகேயன் பெயரை முனுமுனுத்து வரும் நிலையில், சமீபத்தில் இவருக்காக சேர்ந்த கூட்டம் அதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. சென்னையில் பிரம்மாண்டமாக பேன்ஸ் மீட் நடத்தி அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இதையும் படியுங்கள்:
படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்தவர் திடீர் மரணம்... யார் இவர் தெரியுமா?
Sivakarthikeyan

நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதற்கு நிகரான வரவேற்பு சிவகார்த்திகேயனுக்கும் கிடைத்திருக்கிறது. இந்த ஃபேன்ஸ் மீட் வீடியோவை பார்த்த ரசிகர்கள், அடுத்த தளபதி இவர் தான் என பேசி வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com