சூர்யா 43 அப்டேட்டில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா இணைந்து உருவாக்கும் படத்தில் நஸ்ரியா ஃபஹத் இணைந்துள்ளார். ஒன்பது ஆண்டிகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் அடியெடுத்து வைக்கும் நஸ்ரியாவின் ரீஎன்ட்ரி படமே மாஸ் படமாக கவனம் ஈர்த்துள்ளது.
மலையாளம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 2006ம் ஆண்டு ’பலுங்கு’ எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர், மலையாளம்,தெலுங்கு மற்றும் தமிழ் உட்பட மூன்று மொழிகளில் மொத்தம் 16 படங்களில் நடித்துள்ளார். குறைவான படங்களில் நடித்திருந்தபோதும் நஸ்ரியா தன்னுடைய க்யூட்டான மற்றும் அழுத்தமான நடிப்பால் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான ஹீரோயினாக வலம்வருகிறார்.
மலையாளத்தில் ’ஒரு நாள் வரும்’, ’ஓம் ஷாந்தி ஓசானா’, ’பெங்களூர் டேஸ்’, ’நேரம்’ போன்ற படங்கள் மூலம் மலையாள ரசிகர்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றார்.இதற்கிடையில் தமிழ் மற்றும் மலையாள மொழியில் 2013ம் ஆண்டு வெளியான ’நேரம்’ படம் நஸ்ரியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவரின் க்யூட்டான எக்ஸ்பிரசன் ரசிகர்களை கவர்ந்திழுத்தது.
அதன்பின்னர், துல்கர் சல்மான், நிவின் பாலி, ஃபகத் பாசில் மற்றும் நஸ்ரியாஆகியோர் சேர்ந்து நடித்து 2014ம் ஆண்டு வெளியான ’பெங்களூர் டேஸ்’ படம் ஒரு பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்தின்போதுதான் நஸ்ரியா மற்றும் ஃபகத் பாசில் இருவருக்கும் இடையில் காதல் உருவாகி, ’பெங்களூர் டேஸ்’ படம் வெளியாவதற்கு முன்பே இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். நஸ்ரியா,ஃபகத் பாசில் திருமணம் மலையாள திரையுலகில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமணமாகும்.
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்துவந்தர் நஸ்ரியா.குறிப்பாக, 2018ம் ஆண்டு மலையாளத்தில் ’கூடே’ என்ற படத்தில் பிரபல மலையாள நடிகர் ப்ரித்வி ராஜிற்கு தங்கச்சி ரோலில் கலக்கியிருந்தார் நஸ்ரியா. சிறிதுகாலம் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த நஸ்ரியா, எப்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைப்பார் என ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே காத்துக்கொண்டிருந்தார்கள்.
அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தார் இயக்குனர் அட்லீ . அவர் இயக்கத்தில் முதல் முறையாக 2013ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனது முதல் தடத்தை பதித்தார் நஸ்ரியா. இந்த படத்திலிருந்து தமிழ் சினிமா ரசிகர்கள் இவருக்கு வைத்த செல்ல பெயர்தான் ”Expression Queen”. ராஜா ராணி படத்தில் நஸ்ரியா பேசும் ”Brother” டயலாக் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ரொம்ப ஃபேமஸ்.
பின்னர் அதே ஆண்டு தனுஷ் ஜோடியாக நய்யாண்டி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். அந்த படத்தில் சில காட்சிகள் சர்ச்சையான நிலையில், படக்குழுவினர் மீது தைரியமாக புகார் அளித்தார் நஸ்ரியா. இது தமிழ் சினிமாவில் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.
பிறகு 2014ம் ஆண்டு, துல்கர் சல்மானுடன் ’வாயை மூடி பேசவும்’ மற்றும் நஸ்ரியா, ஜெய் இணைந்து நடித்த ’திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற படத்தில் நடித்து மீண்டும் தமிழில் ஒரு Feel Good Movie கொடுத்தார். அதுவே அவரின் கடைசி தமிழ்ப்படமாக அமைந்தது.
அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2020ம் ஆண்டு ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான ’ட்ரான்ஸ்’ படம் நஸ்ரியாவுக்கு மாபெரும் ஹிட்டாக அமைந்தது.
இந்த படத்தில் நஸ்ரியாவின் ரோல் யாரும் எதிர்பாராத அளவுக்கு அட்டகாசமாக அமைந்தது.பிறகு 2022ம் ஆண்டு நானிக்கு ஜோடியாக நடித்து வெளியான ’அண்டே சுந்தரனிக்கி’ என்ற படம் நஸ்ரியாவின் ஒரு மாஸ் கம்பேக்காக அமைந்தது. அப்படம் தமிழிலும் வெளியாகி தமிழ் ரசிகர்களையும் திருப்தி செய்தது.
இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யா43 படத்தில், கதைகளத்திற்கு ஏற்றவாரு நஸ்ரியா ரோல் இருக்குமா? இப்படம் தமிழில் இவருக்கு மாஸ் கம்பேக்காக அமையுமா? என்று நஸ்ரியா ரசிகர்கள் ஒருபக்கம் ஆர்வத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். அதேசமயம் நஸ்ரியா எந்த மொழி படத்தில் நடித்தால், அவரின் நடிப்பு மற்றும் ஆட்டிட்யூட்காகவே நஸ்ரியாவின் ரோல் தென்னிந்தியா முழுவதும் கவனம் ஈர்க்கும். அந்தவகையில் அவரின் தமிழ் கம்பேக் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.