ஃபேண்டசி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்... யார் படம் தெரியுமா?

nithya menen
nithya menen

பிரபல நடிகை நித்யா மேனனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வரும் நித்யா மேனன், அனைத்து படங்களையும் ஹிட் கொடுத்து வருகிறார். அனைத்து ரோல்களுக்குள் சூட் ஆகும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்று சொல்லலாம்.

மழை வரும் அறிகுறி பாடலில், அழகாக நடனமாடி அப்போவே 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் இடத்தில் இடம்பெற்றார். கடைசியாக திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாய் கிழவியாக நடித்தும் அசத்தியிருப்பார். இந்த நிலையில், தற்போது இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
“வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு” – அழகி படத்தின் ரீரிலீஸ்!
nithya menen

அதாவது, பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தில், கதாநாயகர்களாக வினய் ராய், நவ்தீப் பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல் நடிக்கின்றனர்.

இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காமினி, இதை எழுதி இயக்குகிறார். ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் ரொமான்ஸ் காமெடி கலந்த ஃபேண்டசி கதையம்சம் கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டடித்து வரும் நிலையில் இந்த படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com