தேர்தலில் படுதோல்வி... மனமுடைந்த நடிகை ராதிகா சரத்குமார்!

Raadhika Sarathkumar
Raadhika Sarathkumar

மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா தோல்வியடைந்துள்ளார்.

மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதி வெற்றி பெற்று மீண்டும் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளது. பாஜக கூட்டணி 294 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 231 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இதன் மூலம் மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது பாஜக.

இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். இதற்கு முன் தனியாக கட்சி நடத்தி வந்த சரத்குமார் தனது கட்சியை ராதிகாவின் ஆலோசனையை கேட்டு பாஜகவில் இணைப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராதிகா போட்டியிட்ட விருதுநகரில் தான் நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். மாணிக்கம் தாகூருக்கு டஃப் கொடுக்கும் வகையில் விஜய் பிரபாகரனும் முன்னிலை வகித்து வந்தார். ஆனால் சில ஓட்டுகள் வித்தியாசத்திலேயே விஜயபிரபாகரனும் தோல்வியை தழுவினார்.

இதையும் படியுங்கள்:
ஜெயிலர் 2-வில் இணையும் ரஜினியின் நண்பர்... யார் தெரியுமா?
Raadhika Sarathkumar

ராதிகாவுக்கும், அவருக்கும் திமுக வேட்பாளருக்கும் கிடைத்து ஒட்டு வித்தியாசம் இரண்டு லட்சத்திற்கும் மேல் இருக்கிறது. இந்நிலையில் நடிகை ராதிகா தனது தோல்வி பற்றி சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். எல்லா போர்களும் ஜெயிப்பதற்காக அல்ல. சில போர்கள் இந்த உலகத்திற்கு யாரோ ஒருவர் போர்க்களத்தில் இருந்தார் என சொல்லத்தான். உங்கள் அன்புக்கு நன்றி என்று பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com