ஜெயிலர் 2-வில் இணையும் ரஜினியின் நண்பர்... யார் தெரியுமா?

Rajinikanth
Rajinikanth

ஜெயிலர் 2ஆம் பாகத்தில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ஜெயிலர் படம் திரையில் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டது. நடிகர் ரஜினியின் அசத்தலான ஸ்டைல் மூலம் ரசிகர்கள் கவர்ந்திழுக்கப்பட்டனர். இதில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

பான் இந்திய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த படம் ஹிட்டானது. நெல்சனின் கடந்த படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், அவர் மீது விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்தனர், இந்த நிலையில் ஜெயிலர் படம் ஹிட்டடித்தன் மூலம் நெல்சன் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். படத்தில் மேலும் ஒரு மெருகு போல இசையில் பட்டைய கிளப்பியுள்ளார் அனிருத்.

இப்படி பலரும் தங்களது பங்களிப்பால் ஜெயிலரை வெற்றி பெற வைத்துள்ளனர். ஜெயிலரின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் என அனைவருக்கும் பரிசு மழையை பொழிந்தார். இந்த நிலையில் ஜெயிலர் 2ஆம் பாகம் வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரஜினி வேட்டையன் மற்றும் லோகேஷ் இயக்கும் ரஜினி 171 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு ஜெயிலர் 2 தொடங்கும் என சொல்லப்பட்டது. அதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என சொல்லப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பா.ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படத்தின் வில்லன் இவரா? அப்போ ஹீரோ யாரு?
Rajinikanth

இப்போது ஜெயிலர் 2 திரைப்படத்துக்கான திரைக்கதைப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் போன்ற நடிகர்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்த நிலையில் ஜெயிலர் 2 வில் எண்டிஆரின் மகனான பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ரஜினி மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய இருவரின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இருவரும் ஏற்கனவே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com