தளபதி 68-ல் நீலாம்பரி.. அடுத்தடுத்து இணையும் உச்ச நடிகர்களால் ரசிகர்கள் குஷி!

Thalapathy68
Thalapathy68

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெவ்வேறு ஜானரில் படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அஜித்தை வைத்தும் 'மங்காத்தா' என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தார். சமீபத்தில் சிம்புவை மாநாடு படத்தில் கம்பேக் கொடுக்க வைத்து ஹிட் அடித்தார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், லைலா, பிரபுதேவா, அஜ்மல் அமீர், சினேகா, மைக் மோகன், ஜெயராம், யோகி பாபு என பல கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்துபடத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பது சமீபத்தில் உறுதியானது. ஏற்கனவே படத்தில் மாஸான நடிகர்கள் இருக்கும் நிலையில் அடுத்ததாக தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணனும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படையப்பா படத்தில் நீலாம்பரியாக பட்டைய கிளப்பிய ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து விஜயின் 68வது படத்திலும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com