Rashmika Mandanna
Rashmika Mandanna

சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தினாரா ராஷ்மிகா? வதந்திகளுக்கு நச் பதில்!

Published on

முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இதையடுத்து தமிழில், நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து அசத்தியிருப்பார். இதனால் விஜய் ரசிகர்களும் ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில், ஃபிலிமி பவுல் என்ற ஆன்லைன் போர்டல், ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம் குறித்து பேசியிருந்தது. அதில், ராஷ்மிகா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான அனிமல் படம் நல்ல வரவேற்பு பெற்றதால், அவரின் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தெரிவித்திருந்தது.

தற்போது அவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி முதல் ரூ.4.50 கோடி வரை ஊதியம் பெறுவதாக கூறியது. இந்த செய்தி பட்டிதொட்டி எல்லாம் பரவ அடுத்து வரக்கூடிய அனைத்து படங்களுக்குள் ராஷ்மிகா கோடி கணக்கில் சம்பளம் கேட்பதாக பேச்சுக்கள் எழுந்து வந்தன.

இதையும் படியுங்கள்:
ஆண்களே! புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
Rashmika Mandanna

இதனால் கடுப்பான ராஷ்மிகா, தனது ட்விட்டர் பக்கத்தில், நான் சம்பளத்தை உயர்த்தியதாக யார் சொன்னது. இப்படி செய்தி வருவதை பார்த்த பிறகு தான் அப்படி செய்யலாம் என தோன்றுகிறது. தயாரிப்பாளர்கள் கேட்டால், மீடியாவில் அப்படி சொல்கிறார்கள் அதனால் தான்.

என சொல்ல போகிறேன்" என ராஷ்மிகா கூறி இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com