ஆண்களே! புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

Prostate Cancer in tamil
Prostate Cancer in tamil

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசுக்கு புரோஸ்டேட் கேன்சர் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை பாதிக்கும் ஒரு பரவலான புற்று நோயாகும். இது எல்லா வயதினரையும் பாதிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இதனால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த பதிவில் ப்ரோஸ்டேட் புற்றுநோய் சார்ந்த தகவல்களைக் தெரிந்து கொள்ளலாம். 

புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன? 

ஆண்களுக்கு இருக்கும் புரோஸ்டேட் சுரப்பியில் இந்த வகை புற்றுநோய் ஏற்படுவதால் அதை புரோஸ்டேட் புற்றுநோய் என அழைக்கிறார்கள். புராஸ்டேட் சுரப்பியானது ஆண்களின் விதைப்பைக்கு கீழே ஒரு சிறிய வால்நட் வடிவத்தில் இருக்கும். விந்தணுக்களுக்கு ஊட்டமளித்து, தேவையான திரவத்தை உற்பத்தி செய்வதில் புரோஸ்டேட் சுரப்பி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள செல்கள் அசாதாரணமாக வளர்ந்து, கட்டிகளை உருவாக்குவதால் இந்த வகை கேன்சர் உண்டாகிறது. இதைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உடலில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. 

இந்தியாவில் புரோஸ்டேட் புற்றுநோய்: உலக அளவில் ஆண்களுக்கு அதிகமாக ஏற்படும் புற்று நோய்களில் இரண்டாம் இடத்தில் புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளது. இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிங் தரவுகளின் படி, இந்திய ஆண்களில் புற்றுநோய் தொடர்பான இறப்புக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஆறாவது முக்கிய காரணமாகும். 2020 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 1.2 மில்லியன் புதிய புரோஸ்டேட் புற்றுநோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் கிட்டத்தட்ட 9% ஆகும். 

நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்: 

இந்தியாவில் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்து போராடுவதில் உள்ள முக்கியமான சவால்களில் ஒன்று மக்களிடையே இதற்கான போதிய விழிப்புணர்வு இல்லை. பல ஆண்களுக்கு இதன் அறிகுறிகளைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை பெறுவது பற்றி தெரியாது. இதனால் அதிதீவிர நிலையிலையே நோயைக் கண்டறிகின்றனர்.  

இந்தியாவில் இந்த புற்று நோய்க்கான தரமான சுகாதார அணுகல் சவாலாகவே உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் மற்றும் கண்டறியும் வசதிகள் குறைவாக இருக்கிறது. இதனால் தொலைதூர பகுதிகளில் உள்ள ஆண்கள் சரியான நேரத்தில் மருத்துவ கவனிப்பைப் பெறுவது கடினமாகிறது. 

புரோஸ்டேட் புற்றுநோய் ஆண் இனப்பெருக்க அமைப்புடன் தொடர்புடையது என்பதால், இதை இழிவாக நினைத்து நோயைப் பற்றி வெளிப்படையாக விவாதிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். இந்த தயக்கம் ஆண்களை மருத்துவ உதவியை விரைவில் நாடுவதையும், அவற்றின் அறிகுறிகளைப் பற்றி பிறரிடம் விவாதிப்பதையும் தடுக்கிறது. 

இதையும் படியுங்கள்:
18 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா!
Prostate Cancer in tamil

புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள்: 

ஆரம்பக் கட்டங்களில் புரோஸ்டேட் புற்றுநோயைக் கண்டறிவது மிகவும் கடினம். ஏனெனில் இது நீண்ட கால அடிப்படையில் வளரும் புற்றுநோயாகும். கிட்டத்தட்ட பத்து, இருபது ஆண்டுகள் கழித்துதான் அறிகுறிகளே தெரிய ஆரம்பிக்கும். அதன் முக்கிய அறிகுறிகளாக சொல்லப்படுபவை:

  • அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறிப்பாக இரவில்.

  • முறையாக சிறுநீர் கழிக்க முடியாமல் போவது.

  • சிறுநீர் அல்லது விந்துவில் ரத்தம் வெளியேறுவது. 

  • விரைப்புத்தன்மையின்மை

  • இடுப்பு பகுதி அல்லது கீழ் முதுகில் வலி அல்லது அசௌகர்யம். 

மேற்கூறிய அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. இந்த பதிவு தகவல் நோக்கத்திற்காக மட்டுமே எழுதப்பட்டது. எந்த சந்தேகமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லதாகும். இந்த நோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலமாக குணமடைய முடியும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com