
தென் இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்த பிரியா இயக்கிய ‘கண்ட நாள் முதல்’ என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்ததன் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். முதல் படத்தில் சின்ன ரோலில் நடித்த ரெஜினாவுக்கு அடுத்த படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதாவது இவர் 2006-ம் ஆண்டு வெளியான ‘அழகிய அசுரா’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழில் ஹீரோயினாக அறிமுகமான அதே வேகத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தன்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்திக்கொண்ட இவர், பஞ்சாமிர்தம், சூர்யகாந்தி, சிவா மனசுலோ சுருதி, ரோடீன் லவ் ஸ்டோரி, ராஜதந்திரம், சுப்ரமணியம் பார் சேல் என தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வந்தார்.
தமிழை காட்டிலும் ரெஜினாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்க அதனை தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் அவ்வப்போது மட்டும் தலையை காட்டி வந்தார்.
2013ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படம் அவருக்கு ரசிகர்கள் இடையே நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அடுத்து வந்த மாநகரம், சரவணன் இருக்க பயமேன் , ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், தலைவி போன்ற படங்கள் அவரை தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகியாகவும் மாற்றியது.
2019ம் ஆண்டு ‘எக் லடுகி கோ தேக்கா தோ ஐசா லகா’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர், 2022ம் ஆண்டு வெளியான ‘ராக்கெட் பாய்ஸ்’ என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
கடைசியாக அஜித்துடன் விடா முயற்சியை தொடர்ந்து தற்போது மூக்குத்தி அம்மன் 2வில் கமிட் ஆகியுள்ளார்.
தனது மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கக்கூடிய நடிகைகளில் நடிகை ரெஜினாவும் ஒருவர்.
இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற ரெஜினா, தனது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சில நிகழ்வுகளைப் பகிர்ந்தார்.
‘ஒருமுறை பெங்களூருவுக்கு சென்றபோது, அவருக்கு பிடித்த ‘மிஷ்டி டோய்' (mishti doi) என்ற இனிப்பைச் சாப்பிட வேண்டும் என்று ஆசை அவருக்கு வந்துள்ளது.
உடனே, அதனை பல கடைகளில் தேடிய போதும் எங்கும் கிடைக்காமல், கடைசியில், ஒரு கடையில் அந்த இனிப்பைப் பார்த்துள்ளார். ஆனால் அந்த கடைக்காரார் கடையை மூடிக்கொண்டு இருந்துள்ளார்.
ரெஜினா சென்று அந்த கடைக்காரரிடம் சென்று கேட்டபோதும், அவர் கடையைத் திறக்கமுடியாது என்று கூறியுள்ளர். இதனால் வேறு வழியின்றி ‘மிஷ்டி டோய்' சாப்பிடும் ஆசையில் தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லி, அந்த இனிப்பை வாங்கி சாப்பிட்டுள்ளார் நடிகை ரெஜினா. ‘மிஷ்டி டோய்'க்காக பொய் சொல்லிய அந்த நிகழ்ச்சி தனது வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இதை ரசித்த அவரது ரசிகர்கள் ‘மிஷ்டி டோய்'க்காக ரெஜினா என்னவெல்லாம் பண்ணிருக்காங்கனு அவரை கலாய்த்து வருகின்றனர்.