
திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுக்குள் இருக்கும் கெட்ட பழக்கங்களை வெளிப்படையாக சொல்ல விரும்புவதில்லை. குறிப்பாக நடிகைகள் தங்களை பற்றிய ரகசியங்கள் ஏதும் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பார்கள். அந்த வகையில் நடிகை சம்யுக்தா மேனன் தனக்கு இருக்கும் ஒரு கெட்ட பழக்கத்தை பற்றி சமூக வலைதளத்தில் ஓப்பனாக பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
2016-ம் ஆண்டு வெளியான பாப்கார்ன் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை சம்யுக்தா மேனன். அதனை தொடர்ந்து அவர் நடித்த கல்கி, எடக்காடு பட்டாலியன் 06, பீமலா நாயக், கடுவா, பிம்பிசாரா, காலிபதா 2, வாத்தி மற்றும் விருபாக்ஷா போன்ற படங்களில் வணிக ரீதியாக வெற்றிப்படங்களாக அமைந்ததுடன், தனது அழகாலும், நடிப்பு திறமையாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர், தெலுங்கு திரையுலகில் லக்கி நடிகை என ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறார்.
மலையாளம், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சம்யுக்தா மேனன், 2018-ம் ஆண்டு வெளிவந்த களரி என்ற படத்தின் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்தாலும், தனுஷ் உடன் ஜோடி சேர்ந்து நடித்த வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது என்றே சொல்ல வேண்டும்.
இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், சம்யுக்தா அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவர், ‘தனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது என்றும் தினமும் கிடையாது, மன அழுத்தம் அல்லது பதட்டம் ஏற்படும்போது குடிப்பேன்’ என்றும் ஓபனாக பேசியுள்ளார்.
பெரும்பாலும் நடிகர், நடிகைகள் மது அருந்தும் பழக்கம் தங்களுக்கு இருந்தாலும் அதை வெளிகாட்டினால் தங்களது இமேஜ் பாதிக்கும் என்று அதை மறைக்கத்தான் முயல்வார்கள். ஆனால் சம்யுக்தா இப்படி வெளிப்படையாக பேசி இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் இவரின் பேச்சுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தனக்கு குடிப்பழக்கம் உள்ளதை ஒளிவுமறைவு இல்லாமல் தைரியமாக பொதுவெளியில் சொன்ன அவரது துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தற்போது நடிகை சம்யுக்தா மேனன் ராகவா லாரன்ஸ் உடன் ‛பென்ஸ்' படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.