சைலண்டாக திருமணத்தை முடித்த நடிகை டாப்ஸி... ரசிகர்கள் ஷாக்!

Actress Taapsee Pannu marriage
Actress Taapsee Pannu marriage

பிரபல நடிகை டாப்ஸி பன்னு தனது நீண்ட நாள் காதலரை சைலண்டாக கரம் பிடித்துள்ளார்.

தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை டாப்ஸி பன்னு. தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். சுமார் 10 ஆண்டுகளாக இவர் மத்தியாஸ் போவ் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் பல வருடங்களாக டேட்டிங் செய்து வரும் நிலையில், தற்போது திருமணம் செய்துள்ளனர்.

ஆனாலும் இருவரும் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இது குறித்து டாப்ஸி பன்னுவின் உறவினர் ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை உறுதியளித்துள்ளார். அதில், இருவரும் மார்ச் 23ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், மார்ச் 20ஆம் தேதி இந்த திருமணத்திற்கு முந்தைய திருவிழா நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
களைகட்டிய நிச்சயதார்த்தம்.. மகனுடன் பங்கேற்ற நடிகை எமிஜாக்சன்!
Actress Taapsee Pannu marriage

மேலும் இந்த திருமணதில் நெருங்கிய உறவினர்கள், பவல் குலாட்டி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் மட்டும் கலந்து கொண்டதாக தெரிகிறது. இருவரும் தங்களது திருமணம் குறித்து ஊடகத்திற்கு தெரிவிக்க விருப்பமில்லாததால், சத்தமில்லாமல் திருமணத்தை முடித்துள்ளனர். தற்போது இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவர்களின் திருமணம் உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் முடிந்து 2 நாட்கள் ஆகியும் வெளியில் தெரியாமல் வைத்திருக்கும் நடிகையால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com