18 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா!

திரிஷா
திரிஷா

நடிகை த்ரிஷாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் மல்லிதி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம் விஸ்வம்பரா (Vishwambhara). யுவி கிரியேஷன் ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். கடந்த ஜனவரி மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பொன்னியின் செல்வன், லியோ படங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது சிரஞ்சீவியின் 156வது படமான விஸ்வம்பரா படத்தில் திரிஷா இணைந்துள்ளதாக நடிகர் சிரஞ்சீவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷா கலந்துகொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள த்ரிஷா, 18 வருடங்களுக்குப் பிறகு உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். நன்றி என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ஸ்டாலின் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக இதில் திரிஷா நடிக்கவிருப்பதால் தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com