25 வருடங்களுக்குப் பிறகு இணையும் பிரபு தேவா, ஏ.ஆர்.ரஹ்மான்!

 Prabhu Deva & AR Rahman
Prabhu Deva & AR Rahman

25 வருடங்களுக்குப் பிறகு பிரபு தேவா நடிக்கும் புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் போஸ்டர்களை தயாரிப்பாளர் குஞ்சுமோனன் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குனராகவும், நடனக் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், சினிமா துறையில் முக்கால்வாசி துறையில் கால்பதித்த பிரபு தேவாவின் அடுத்தப் படத்திற்கான அப்டேட் வெளியானது. நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாளை 12 மணிக்கு ஒரு அறிவிப்பு இருக்கிறது என்று கூறி ஒரு அறிவிப்புப் போஸ்டரை வெளியிட்டார்.

அது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் கமென்ட்டில் வரிசையாகக் கேள்விகளை எழுப்பினர். இந்தநிலையில் இன்று 12 மணிக்கு Behindwoods & தயாரிப்பாளர் குஞ்சுமோனன் தனது X தளம் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் அறிவிப்புப் போஸ்டர்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

அதாவது #arrpd6 என்ற தற்காலிக பெயரில் இந்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது. முதலாவது போஸ்டரில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபு தேவாவின் சிக்னேச்சர் ஸ்டைலை வைத்து அவர்களின் பெயரை அறிவித்திருக்கிறார்கள். அந்தப் போஸ்டரின் கீழ் 25 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஏ.ஆர்.ஆர் மற்றும் பிரபு தேவா என்று ஆங்கிலத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். மேலும் அடுத்தடுத்தப் போஸ்டர்களில் நடிப்பவர்களின் பெயரை அறிவித்திருக்கிறார்கள்.

அந்தவகையில் இந்தப் படத்தில் பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், தீபா உட்பட பலர் நடிக்கவுள்ளனர். இதில் மலையாள சினிமாவிலிருந்து அஜூ வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் இணைகிறார்கள்.

மலையாள சினிமாவில் நீண்ட காலம் போராடி வந்த அர்ஜுன் அசோகன் சமீபத்தில் ப்ரம்மயுகம் படத்தில் தனதுத் தனிப்பட்ட நடிப்பால் அனைவரையும் ஈர்த்தார். அதற்கு முன்னரே  ரோமஞ்சம் படத்தின் மூலம் அவரது சிக்னேச்சர் தென்னிந்தியா முழுவதும் அந்த சமயத்தில் பிரபலமாக இருந்தது. இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவுள்ளார்.

இதையும் படியுங்கள்:
மலையாளத்தில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய விஜய்: வைரலாகும் வீடியோ!
 Prabhu Deva & AR Rahman

என்.எஸ்.மனோஜ் இயக்கவிருக்கும் இப்படத்தை அவருடன் சேர்ந்து திவ்யா மனோஜ் மற்றும் ப்ரவீன் எலக் ஆகியோர் தயாரிக்கவுள்ளனர். தயாரிப்பாளர் குஞ்சுமோனன் இந்தப் போஸ்டரை வெளியிட்டார். Behindwood இப்படத்தின் போஸ்டரை வெளியிடும்போது காதலன் படத்தை இயக்கிய சங்கர் சாருக்கு நன்றி என்றுப் பதிவிட்டிருந்தது.

பிரபு தேவா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கடைசியாக காதலன் மற்றும் மின்சாரக் கனவு ஆகிய படங்களில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com