27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ‘மின்சார கனவு’ ஜோடி!

Minsara kanavu Pair
Minsara kanavu Pair

மின்சார கனவு படத்தின் மூலம் 90s களின் மிகவும் பிரபலமான ஜோடியாக ஆன பிரபுதேவா மற்றும் கஜோல் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

கடந்த 1997ம் ஆண்டு வெளியான மின்சார கனவு படம், ஒரு சிறந்த காதல் படமாக இன்று வரை உலா வந்துக் கொண்டிருக்கிறது என்றே கூற வேண்டும். அப்படத்தில் நடித்த கஜோல், பிரபுதேவா மற்றும் அரவிந்த் சாமி என அனைவரின் கதாப்பாத்திரங்களுமே சிறப்பாக செதுக்கப்பட்டிருக்கும். பாலிவுட்டில் கஜோல் என்றால், ஷாருக்கான்தான் ஞாபகம் வருவார்.

ஆனால், கோலிவுட்டைப் பொறுத்தவரை, கஜோல் என்றால், பிரபுதேவாதான். இன்னும் சொல்லப்போனால், ஷாருக்கானும் கஜோலும் ஏராளமான படங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆனால், கஜோல் பிரபு தேவாவுடன் ஒரே ஒரு படம்தான் சேர்ந்து நடித்திருக்கிறார். ஆனாலும், அந்த ஒரு படம் இன்று வரை தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

குறிப்பாக, “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடல் என்றால், குழந்தைகள் கூட அமைதியாகக் கேட்பார்கள். அந்த அளவிற்கு ஒரு ஹிட் படத்தைக் கொடுத்தவர்கள் பிரபுதேவாவும் கஜோலும்.

அந்தவகையில் 27 வருடங்களுக்குப் பிறகு கஜோல் மற்றும் பிரபு தேவா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் சரண் தேஜ் உப்பலபடி இயக்கவுள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். முதல் படமே அதிக பட்ஜெட்டில் பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கிறார். இவர் இப்படத்தின்மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.

மேலும் இப்படத்தில் நஸ்ருதீன் ஷா, சம்யுக்தா மேனன், ஜிஷூ சென் குப்தா, ஆதித்யா சீல் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். ஆக்ஸன் மூவியாக உருவாகிவரும் இப்படத்தை மாஸ் என்டர்டெய்னர் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே, இப்படத்தின் முதல் ஷெட்யூல் முடிக்கப்பட்டுவிட்டதாகவும், டீஸர் எடிட் செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆகையால், விரைவில் டீஸர் மூலம் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
என்ன…? இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாரா பிரதமர்?
Minsara kanavu Pair

சிறப்பான காட்சிகளைத் தரும் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார், மேலும் நவின் நூலி படத்தொகுப்பைக் கையாளுகிறார்.

இப்படம் பல எதிர்பார்ப்புகளைத் தாங்கி நிற்பதற்கு முக்கிய காரணம், கஜோல் மற்றும் பிரபுதேவா ஜோடிதான். ஆகையால், கதைக்களமும் உருவாக்கவும் சிறப்பாக அமைந்துவிட்டால், ரசிகர்களின் முழு ஆதரவையும் இப்படம் பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com