“உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” - வீடியோ வெளியிட்ட அஜித்..! ட்ரோல் செய்த ரசிகர்கள்!

போர்ச்சுகல் கார் பந்தயத்திற்காக அஜித் வெளியிட்ட வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்.
Ajith troll
Ajith Troll
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அஜித். நடிகர் என்பதையும் தாண்டி இவர் கார் ரேஸில் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக கார் ரேஸ் எதற்காக கடினமான உழைப்பையும், அதிக கவனத்தையும் அஜித் செலுத்தி வருவதால், அவர் நடிக்க உள்ள திரைப்படம் தள்ளிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் அஜித் கார் பந்தயத்தின் மீதே அதையே கவனத்தை செலுத்துகிறார்.

நடிகர் அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்து அப்போதே மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியவர். தன் ரசிகர்களை வைத்து தான் ஆதாயம் தேட போவதில்லை என்று கூறியவர். மேலும் அஜித் தனக்கென்று குறிப்பிட்ட விதிகளை வகுத்து அதன்படி வாழ்ந்து வருபவர். மற்ற நடிகர்களைப் போல ரசிகர் மன்ற சந்திப்புகள், நிர்வாகிகள் சந்திப்புகள், திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் , சக நடிகர்களின் திரைப்படங்களுக்கு விளம்பரம் செய்தல், அல்லது அவர்களைப் பாராட்டி பதிவிடுதல், திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் , திரை பிரபலங்களின் மறைவிற்கு செல்லுதல் போன்ற விஷயங்களை முற்றிலும் செய்யாதவர்.

அஜித்தின் பாணி தனி என்பதால் அவரது ரசிகர்களும் அவரை அப்படியே ஏற்றுக் கொண்டனர். ஆனால், சமீப காலமாக அஜித் தனது விதிகளை உடைத்து வருகிறார். அஜித் தனது திரைப்படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால், அவர் 'சம்பா கோலா ' விளம்பரத்தில் நடித்தது , பலரது விமர்சனத்தையும் பெற்று தந்தது. லண்டனில் நடைபெற்ற, அஜித் பங்கேற்ற கார்பந்தயத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டதும் இது போன்ற விவாதத்தை துவக்கி வைத்தது. அப்போது பல ரசிகர்கள்," இவர்களுக்காக நாம் சண்டை போட்டுக் கொண்டோம்! இவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்," என்று கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இன்று அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களிடம் ஆதரவை கோரினார் .போர்ச்சுகலில் உள்ள போர்டிமாவ் சர்க்யூட்டில் , அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ‘மிச்செலின் லீ மான்ஸ் கப்’ கார் ரேசின் இறுதிச்சுற்றில் நடிகர் அஜித் பங்கேற்க உள்ளார். அதற்காக அவர் வெளியிட்ட காணொளி காட்சியில் “உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். லவ் யூ ஆல்” என்று தெரிவித்திருந்தார்.

Ajith Kumar
Ajith Kumar

அஜித் வெளியிட்ட இந்த வீடியோ ரசிகர்களிடம் ஒரு புறம் ஆதரவும் மறுபுறம் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது. அஜித் கார்பந்தயத்தில் வெற்றி பெற வேண்டி அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. அதே நேரம் பல ரசிகர்கள் அஜித்தை ட்ரோல் செய்தும் வருகின்றனர். அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் போட்ட பல கமெண்ட்கள் சமூக ஊடகத்தை தாண்டி, பொது ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

அஜித்தின் வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளதால் அதற்கு பல ரசிகர்கள், "குடும்பத்தை பார்க்க வேண்டும் அண்ணா!" என்று பதிவிட்டு வருகின்றனர்". சிலர் "நாங்கள் ஆர்வமாக இருந்த காலத்தில் ஆதரவு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இப்போது நாங்கள் குடும்பத்தை பார்க்கும் போது ஆதரவு கேட்கிறீர்களே!" என்றும் பதிவிட்டுள்ளனர். சிலர் , "உங்கள் நண்பர் விஜய்யிடம் ஆதரவு கேளுங்கள்", " எங்க குடும்பத்தையும் பார்க்கணும் தல , வாழு வாழ விடு", என்றெல்லாம் ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com