

இளையராஜா பாணியில் அஜித்குமார் , ஒரு நிறுவனம் தனக்கு சம்பள பாக்கி வைத்ததாக கூறி நோட்டீஸ் அனுப்பியது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. வழக்கமாக நடிகர் அஜித்குமார் தனது திரைப்படங்களின்
விளம்பர நிகழ்ச்சிக்கு கூட செல்லாதவர். தமிழ் திரை உலகின் முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் , திரை உலகம் சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார். மேலும் மிக நீண்ட காலமாக விளம்பர படங்களிலும் அவர் நடிக்காமல் இருந்தார். ஆனாலும் தமிழ் சினிமாவில் அஜித்திற்கு என்று தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் அவர் உச்ச நட்சத்திரமாக இருந்தபோதிலும், அவரது ஆர்வம் பெரும்பாலும் கார் ரேஸ் மீது உள்ளது. சமீபத்தில் கூட இங்கிலாந்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் தனது குழுவினர்களுடன் கலந்து கொண்டார். அந்தப் போட்டியில் தமிழக முதல்வரும் , அஜித்தின் முன்னாள் போட்டியாளருமான விஜய் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
அஜித்தின் தீராத கார் ரேஸ் மீதான ஆர்வத்தினால் அவர் மிகக் குறைவான திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். பெரும்பாலும் ஒரே இயக்குனர் படங்களில் தொடர்ச்சியாக நடிப்பதை அவர் விரும்புகிறார். அதுவும் தொடர்ச்சியாக சமீப காலமாக அவர் படப்பிடிப்பு பணிகளுக்கு இடையில், தீவிரமாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். உலகம் முழுக்க நடைபெறும் கார் பந்தயங்களில் குழுவினருடன் அஜித் கலந்து கொள்கிறார்.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக அவர் இருந்த போதிலும், விளம்பர படங்களில் நடிப்பதன் மூலம் கார் பந்தய பயிற்சிக்கு தேவையான வருவாயை ஈட்டுகிறார். இதற்காக அஜித் தனது கொள்கையான விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதையும் மாற்றிக் கொண்டுள்ளார். முன்பு நெஸ்கபே சன்ரைஸ் விளம்பரங்களில் அஜித் நடித்தது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
நீண்ட காலத்திற்குப் பிறகு அஜித் கேம்ப கோலா விளம்பரத்தில் தோன்றியிருந்தார். வழக்கமாக அவர் நடித்த விளம்பர படத்திற்கு வரவேற்பு கிடைக்க வேண்டிய நேரத்தில், ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தது. அஜித் தனது திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளாதவர், எதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடிக்கிறார்? என்று விமர்சனமும் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் அஜித், நோவா ரியல் எஸ்டேட் நிறுவனம் தான் நடித்த விளம்பர படத்திற்கு, மீதி சம்பளத் தொகையை தரவில்லை என்றும் , அந்த தொகையை உடனடியாக வழங்குமாறும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த விளம்பர படத்தில் நடிப்பதற்காக அஜித்திற்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, முதற்கட்டமாக அவருக்கு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் ஒப்பந்தப்படி அஜித் நடித்த விளம்பரத்தை ஒளிபரப்பிய பின்னர் தான், அவரது மீதி சம்பளத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், நீண்ட காலம் ஆகியும் நோவா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரப் படம் ஒளிபரப்பு செய்யப்படாததால் அஜித்திற்கும் அவர்கள் சம்பளம் வழங்காமல் இருந்தனர்.
தற்போது அஜித்தின் நோட்டீசை தொடர்ந்து அவர்கள் உடனடியாக அந்த விளம்பரத்தை ஒளிபரப்புவதற்கு முடிவு செய்துள்ளனர். அஜித் நடித்த அந்த விளம்பரத்தில், "எந்த ஒரு இடத்திலும் அவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரை தனது வாயால் கூற மாட்டேன்," என்று நிபந்தனை விதித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.