திரைப்பட விளம்பரங்களை தவிர்த்த அஜித், பிஸ்கட் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கியது எதனால்?

ஜென்டில்மேன் பிம்பத்தை உடைத்து விளம்பரங்களில் நடிக்கும் அஜித்தின் பின்னணி என்ன?
Ajith got trolled
Ajith Biscuit addReliance
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

விளம்பரங்களில் நடித்து சமீப காலமாக சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் நடிகர் அஜித்குமார் , தற்போது பிஸ்கட் விளம்பரத்தில் நடித்து மீண்டும் ட்ரோலில் மாட்டிக் கொண்டார். கோலிவுட்டில் ஜென்டில்மேன் நடிகர் என்று பெயர் எடுத்து பிரபலமானவர் நடிகர் அஜித்குமார். இவரை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிரேம புத்தகம் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகப்படுத்தினார். அந்த காலகட்டத்தில் அஜித் , சரணின் நெருங்கிய நண்பராக இருந்ததால் , இந்த வாய்ப்பினை எஸ்பிபி வழங்கி இருந்தார். அஜித்தின் ஆரம்பக் கால தொழில் வளர்ச்சியில் எஸ்பிபி குடும்பத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது..

பின்னர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த அஜித் , பிற்காலத்தில் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். அஜித் தனக்கு என்று குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக் கொண்டார். அதன்படி அஜித் தான் நடிக்கும் திரைப்படத்தின் எந்த ஒரு விளம்பர சார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். மேலும் தனது திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்களிடம் எந்த ஒரு வேண்டுகோளும் விடுக்க மாட்டார். தனது திரைப்படத்தினை பிரபலப்படுத்த எந்த ஒரு முயற்சியும் எடுக்க மாட்டார்.

இது மட்டுமின்றி திரையுலகினர் நடத்தும் எந்த ஒரு விழாவிற்கும் அஜித் கலந்து கொள்ள மாட்டார். விருது வழங்கும் நிகழ்ச்சிகள் , சினிமா கலை நிகழ்ச்சிகள் , சினிமா துறையினர் இல்லத் திருமண விழாக்கள் , மற்றும் துக்க நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்து கொள்வதே இல்லை. அதுபோல தன் வீட்டு துக்க நிகழ்வுகளிலும் ரசிகர்கள் பங்கேற்க வேண்டாம் என்று அறிவித்தவர். பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களையும் அஜித் கலைக்க உத்தரவிட்டார். இது போன்ற காரணங்களினால் , அஜித் ரசிகர்களை வைத்து சம்பாதிக்கவும் அரசியல் செய்யவும் நினைக்காதவர், என்ற நற்பெயர் அவருக்கு இருந்தது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பவர் ஆப் பிஸ்கட் விளம்பரத்தில் நடித்தது, கடந்த சில தினங்களாக அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஏதுவாக இருந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் இண்டிபெண்டன்ஸ் பிராண்ட் பெயரில் புதிதாக 9 வகையான பிஸ்கட்டுகள் அறிமுகம் செய்துள்ளனர். பவர் ஆப் , மில்கி பவர், பட்டர்பிளக்ஸ், கோகோ, வெண்ணிலா என்று பலவகை சுவையுடன், 28 பேக் வகைகளுடன் ₹5 லிருந்து ₹125 வரையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Reliance partners with Ajith Kumar Racing
Reliance partners with Ajith Kumar Racing

அஜித் பிஸ்கட் விளம்பரத்தில் நடித்ததில் இருந்து ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். அவர் ரேஸ் அணிக்காக பிஸ்கட் விளம்பரத்தில் நடிப்பார். ஆனால், அவரை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்து இருக்கும் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் படத்தை விளம்பரப்படுத்த வர மாட்டார், ஆனால் , அவரது முதலீட்டில் உருவான ரேசிங் அணி என்று வந்ததும் இப்போது விளம்பர படங்களில் நடித்து வருகிறார், என்று விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் அஜித் கேம்ப கோலா விளம்பரத்தில் நடித்த போதும் இது போன்ற ட்ரோல்களை சந்தித்தார். இசையமைப்பாளர் தேவா மறைவின் போது இரங்கல் செய்தி கூட வெளியிடாதவர் என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார். இப்போது பிஸ்கட் விளம்பரத்தில் நடித்துள்ளதால் அதற்கும் ட்ரோலை சந்தித்து உள்ளார்