KGF இயக்குனருடன் கைக்கோர்க்கும் அஜித்குமார்? போடுங்கடா வெடிய!

Ajith Kumar and Prashanth Neel.
Ajith Kumar and Prashanth Neel.CineJosh
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

கே.ஜி.எஃப், சலார் போன்ற பான் இந்தியா படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தனது அடுத்தப் படத்தில் அஜித் குமாருடன் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

பிரசாந்த் நீல் 2014ம் ஆண்டு கன்னடாவில் 'உக்ரம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின் 2018ம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படம் மூலம் பான் இந்தியா இயக்குனராக உருமாறினார். நீல் தனது இரண்டாவது படத்திலேயே மாபெரும் ஹிட் கொடுத்ததால் பல கதாநாயகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நீல் மீண்டும் 2022ம் ஆண்டு யாஷ் வைத்தே கேஜிஎஃப் பாகம் 2 படத்தை இயக்கினார். இவருடைய இந்தப் படமும் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இதனையடுத்து பிரசாந்த் நீல் பிரபாஸுடன் கைக்கோர்க்கிறார் என்ற செய்தி பரவியதையடுத்து ரசிகர்கள் ஒரு ப்ளாக்பஸ்டரை நோக்கிக் காத்துக்கொண்டிருந்தனர். அந்தவகையில் சென்ற ஆண்டு டிசம்பர் 22ம் தேதி பிரபாஸ் நடிப்பில் நீல் இயக்கத்தில் 'சலார்' படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்தவகையில் சலார் பாகம் 2 - ஷௌர்யாங்கா பர்வம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனத் தகவல் வெளியானது.

தற்போது வெளியான தகவல்படி பிரசாந்த் நீல் தனது அடுத்தப் படத்தில் அஜித் குமாருடன் கைக்கோர்க்கவுள்ளார் எனத் தெரியவருகிறது. மேலும் இப்படத்தின் மூலம் நீல் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இன்னும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் உள்ளன. அதன்பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். மேலும் இப்படத்தை Hombale films நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கேஜிஎஃப் பாகம் 1 படத்திற்கு பின்னரே நீல் அஜித் குமார் இணையப்போவதாக தகவல் வந்தது. ஆனால் அப்போது சில காரணத்தினால் அது நடக்கவில்லை. ஆனால் அவ்வப்போது நீலுக்கும் அஜித்துக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடந்து வந்ததாக சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ரசிகர்களுடன் டான்ஸ் ஆடும் அஜித்.. பல நாட்களுக்கு பிறகு அஜித் நடனமாடுவதை பார்த்து ரசித்த ரசிகர்கள்!
Ajith Kumar and Prashanth Neel.

இந்தநிலையில் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் பிஸியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆருடன் ஒரு படம், கேஜிஎஃப் பாகம் 3 படம் என லைன் அப் வைத்திருக்கிறார். இதற்கிடையில் பிரசாந்த் நீல் சலார் பாகம் 2 க்கு பின்னரே அஜித் வைத்து படம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித் குமாரின் படங்கள் வருடத்திற்கு ஒருமுறைத்தான் வெளியாகிறது என சோகத்தில் இருந்த  ரசிகர்களுக்கு இந்த தகவல் மாபெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com