அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க யாரும் முன்வராததற்கு இதுதான் காரணமா?

அஜித் குமாரின் கண்டிஷன்களால் தான் அவருக்குப் புதுப்படங்கள் புக் ஆகவில்லையா?
Actor Ajith Kumar
Actor Ajith KumarImage credit: AI Image
Updated on

அஜித்குமாரின் விடாமுயற்சி தோல்வி அடைந்தாலும், குட் பேட் அக்லி படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும், வேண்டுகோளாகவும் இருந்தது.

அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்கப்போவது ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டாலும் தயாரிப்பு யார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

காரணம் அஜித் குமாரின் சம்பளம் இப்போது 175 கோடி ரூபாயாம். இப்போது இருக்கும் சூழலில் அஜித் குமாரின் படம் அவ்வளவு பிஸ்னெஸ் ஆகுமா? என்பது டவுட் தான். அதனால் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஒன்றரை வருடங்களாக அஜித் குமார் எந்தப்படத்திலும் புக் ஆகாமல் இருக்க இதுவும் காரணமாம். 125 கோடியிலிருந்து 150 கோடிக்குள் சம்பளம் கேட்டால் தேவலை என பலரும் பிரியப்படுகிறார்கள். ஆனால், அஜித் இறங்கி வருவதாக இல்லை.

காரணம் இவரது சக போட்டியாளர் விஜயின் பட சம்பளம் ரூ. 200 கோடி டூ ரூ. 250 கோடி. இனி, முதல்வர் விஜய், படங்களில் நடிக்கப்போவதில்லை என்றாலும், அஜித்தின் சம்பளத்தைக் குறைத்தால் அது கவுரவக் குறைச்சல் ஆகி விடும் என்று அவர் நினைக்கிறாராம்.

பிராபிட் ஷேர் முறையில் நடிக்கப்பெரும்பாலான நடிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நடித்தோமா? சம்பளம் வாங்கினோமா?என்பது தான் அவர்கள் எண்ணம். பிராபிட் ஷேர் என்பது ரிஸ்க்.

இதையும் படியுங்கள்:
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? அல்லது அண்ணாமலை இயக்கமா? ராகவா லாரன்ஸ் எடுக்கும் முடிவு என்ன?
Actor Ajith Kumar

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க அஜித் குமார் புதிதாக ஒரு கண்டிஷன் போடுகிறாராம். சம்பளத்தை துபாயில் இருக்கும் அவரது கார் ரேஸ் கம்பெனி அக்கவுண்டில் போடச்சொல்கிறாராம். இது கொஞ்சம் ரிஸ்க் என்பதால் தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்களாம்.

அஜித் குமார் ஒரு சர்வதேச கார் பந்தய வீரரும் கூட. அவர் தனது திரை வாழ்க்கையையும், கார் பந்தய வாழ்க்கையையும் சமநிலையாக கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். எனவே, வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிப்பது, மீதமுள்ள நேரத்தை கார் பந்தயங்களில் செலவிடுவது என்பது அவரது தெளிவான திட்டமாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com