

பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி நடிகர் அஜித் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அதிர்ச்சி கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதேநேரம் தற்போது அரசியலில் இயங்க ஆர்வம் காட்டி வரும் நடிகர் தனுஷ் எதிர்காலம் பற்றியும் தனது கணிப்புகளை அவர் கூறியுள்ளார். ஆனால், சிவகார்த்திகேயனின் எதிர்காலம் குறித்து அவர் எதுவும் கூறாதது , அவரது ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது. இந்த கணிப்புகள் வெளியாகி சமூக ஊடகங்களில் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.
இந்திய அளவில் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஜோதிடர் பிரசாந்த் கினி , இவரது கணிப்புகள் பெரும்பாலும் துல்லியமாக நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். இவரது கணிப்புகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டு. இவர் சர்வதேச அளவிலும் , இந்தியா மற்றும் மாநிலங்கள் அளவிலும் தனது கணிப்புகளை வெளியிட்டு வருகிறார். மிகவும் குறிப்பாக சர்வதேச சூழல்கள் , போர் , ஆட்சி மாற்றம் , அரசியல் எதிர்காலம் போன்றவற்றையே மையப்படுத்தி இவர் கணிப்புகளை வெளியிடுகிறார்.
பிரசாந்தின் முந்தைய கணிப்புகளில் நேபாளத்தில் நடைபெற்ற ஆட்சி கவிப்பு , ஜென் சி தலைமுறையினரின் போராட்டம் ஆகியவற்றை துல்லியமாக, அவை நடைபெறும் முன்னரே கணித்து வெளியிட்டு இருந்தார். சமீபத்தில் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் மதரீதியாக வன்முறைகள் நடைபெறும் என்று கணித்து வெளியிட்டு இருந்தார். மேலும் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர்களை பற்றியும் , அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் துவங்கி , உலகம் முழுக்க எரிபொருள் தட்டுப்பாடு நிலவ இருக்கும், என்பதையும் முன்கூட்டியே கணித்து வெளியிட்டு இருந்தார்.
இவர் கூறிய இந்த கணிப்புகள் அனைத்தும் நடைபெற்றதால் அவரது கணிப்புகளுக்கு மவுசு கூடியது. இவர் தற்போது நடிகர் தனுஷ் குறித்தும் நடிகர் அஜித் குறித்தும் வெளியிட்டுள்ள கணிப்புகள் வரவேற்பினை பெற்று வருகிறது. பிரசாந்த் தனுஷ் பற்றி , "தனுஷ் விரைவில் 2028 அல்லது 29ஆம் ஆண்டு கால வாக்கில் அரசியலில் நுழைவார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், விஜய்க்கு கிடைத்தது போன்ற உடனடியான வெற்றி அவருக்கு கிடைக்காது. அதே வேளையில் ஒரு நடிகராக அவருக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உண்டு , விஜய் போன்று வெற்றி பெற வேண்டும் என்றால் அது அஜித்தால் மட்டும் முடியும்" என்று கூறியுள்ளார்.
இன்னொரு பதிவில் , " தல அஜித் 2032 ஆம் ஆண்டு வாக்கில் அரசியலுக்கு வருவார் , அவரால் அதிமுக மீண்டும் உயிர் பெறும். அதுவரை அதிமுகவிற்கு எந்த ஒரு பெரிய வெற்றியும் கிடைக்காது," என்று பிரசாந்த் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கணிப்புகள் இன்று சமூக வலைதளங்களில் அதிகம் பேசுபொருள் ஆகியுள்ளது. தனுஷ் அரசியலுக்கு வருவதற்காக வேலைகள் செய்து வருவது அனைவரும் அறிந்தது தான். ஆனால், நடிகர் அஜித் நீண்ட காலமாக போது சமூகத்திலிருந்து விலகி இருக்கிறார். அவர் தான் நடித்த சினிமாவின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு கூட செல்ல மாட்டார். திரைத்துறை சார்ந்த எந்த ஒரு நிகழ்வுக்கும் அவர் செல்வதுமில்லை. பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வதில்லை , விஜய் போன்று நீண்ட காலம் ரசிகர்களுடன் தொடர்பிலும் அவர் இல்லை. இந்த நிலையில் அவர் எவ்வாறு அரசியலுக்கு வருவார்? அது போன்ற மனநிலையில் அவர் இருக்கிறாரா? போன்ற விவாதங்கள் தொடங்கியுள்ளது.