நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்து பல கோடிகளை சம்பாதித்துக் கொடுத்த படம் துணிவு. அதைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அவரது 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தை ஆரம்பத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. அதன் பிறகு அந்தக் கதையில் ஏற்பட்ட சில குழப்பத்தால் அந்தப் படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகி விட்டார். அதைத் தொடர்ந்து அந்தப் படம் குறித்து தான் வெளியிட்ட தகவல்கள் அனைத்தையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கினார் விக்னேஷ் சிவன்.
இந்த நிலையில் இயக்குநர் மகிழ்திருமேனி சொன்ன கதை நடிகர் அஜித்துக்கு மிகவும் பிடித்து விட்டதாம். அதனால் அந்தக் கதையை ஓகே சொன்ன அஜித், படத்தில் ஆங்காங்கே சில மாஸான ஆக் ஷன் காட்சிகளும் இடம் பெற வேண்டும் என்று கூறி உள்ளாராம். அதை அடுத்து, நடிகர் அஜித் சொன்னதுபோல், தனது கதையில் ஆங்காங்கே சில திருத்தங்களைச் செய்து வருகிறாராம் இயக்குநர் மகிழ் திருமேனி.
தற்போது தனது குடும்பத்துடன் வெக்கேஷனுக்காக வெளிநாடு சென்றுள்ள நடிகர் அஜித், இந்தியா திரும்பியதும் அவரது 62வது படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.