மீண்டும் இளமை தோற்றத்தில் அஜித்... மாஸ் போஸ்டர் ரிலீஸ்!

Vidamuyarchi poster
Vidamuyarchi poster
Published on

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் போஸ்டர் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித். தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான, ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து விடாமுயற்சி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் அஜித் அஜர்பைஜான், துபாய் என உலாவி வருகிறார்.

இயக்குநர் மகிழ் திருமேனி செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் இணை இயக்குநராகப் பணியாற்றி அதன் பிறகு இயக்குநராக அறிமுகமானவர். இவரின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம்தான் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கேசான்ரா என பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை பிரபல லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்ற வருடம் மே 1, விடாமுயற்சி எனப் பெயர் அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4 அன்று தொடங்கப்பட்டது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அஜித் மற்றும் ஆரவ் காருக்குள் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அந்த கார் கிரேன் உதவியால் அந்தரத்தில் தூக்கப்படுகிறது. அதன்பின் ஒரு கட்டத்தில் அந்தரத்திலேயே கார் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் அஜித் மற்றும் ஆரவ் காரின் உள்ளிருக்கும் காட்சியை பார்க்கும்போது திகில் அடையச் செய்தது.

இதையும் படியுங்கள்:
‘என்னைக் கொன்று விடுவார்கள் என்று பயமாக உள்ளது’ - அறிவு!
Vidamuyarchi poster

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எதிர்மறையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், அடுத்தடுத்து 2 போஸ்டர்களை வெளியிட்டு அந்த விமர்சனங்களை தவிடுபொடியாக்கியது படக்குழு. இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் அடுத்த போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த போஸ்டரில் மீண்டும் இளமையான கெட்டப்பில் அஜித், திரிஷாவுடன் உள்ளார். முதல் இரண்டு போஸ்டர்கள் நரை முடியுடன் இருந்த அஜித், தற்போது மீண்டும் கருப்பு நிற முடியுடன் உள்ளார்.

எனவே இந்த லுக் பிளாஷ் பேக் லுக்காக இருக்கலாம் என ரசிகர்கள் தங்களது யூகத்தை சொல்லி வருகிறார்கள். விடாமுயற்சியின் ஷூட்டிங் தற்போது அஜர்பைஜானில் நடந்து வருவதாகவும், இன்னும் ஹைதராபத்தில் இறுதிகட்ட ஷீட்டிங் மட்டும் மீதம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com