அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி ட்ரீட்: ‘விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

விடாமுயற்சி
விடாமுயற்சி
Published on

ஜர்பைஜான் நாட்டில் மீண்டும், ‘விடாமுயற்சி’ படப் பணிகள் துவங்கியுள்ள நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தற்போது, ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான, ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, தற்போது ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் அஜித் அஜர்பைஜான், துபாய் என உலாவி வருகிறார். இயக்குநர் மகிழ் திருமேனி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் இணை இயக்குநராகப் பணியாற்றி அதன் பிறகு இயக்குநராக அறிமுகமானவர். இவரின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம்தான் ‘விடாமுயற்சி.’ இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கேசான்ரா என பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை பிரபல லைகா பட நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்ற வருடம் மே 1, அஜித் மற்றும் மகிழ் திருமேனியின் AK 62 ‘விடாமுயற்சி’ எனப் பெயர் அறிவிக்கப்பட்டது. ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4 அன்று தொடங்கப்பட்டது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அஜித் மற்றும் ஆரவ் காருக்குள் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அந்த கார் கிரேன் உதவியால் அந்தரத்தில் தூக்கப்படுகிறது. அன்பின் ஒரு கட்டத்தில் அந்தரத்திலேயே கார் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் அஜித் மற்றும் ஆரவ் காரின் உள்ளிருக்கும் காட்சியை பார்க்கும்போது திகில் அடையச் செய்தது.

இந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவராலும் கவனம் பெற்றுள்ளது. கடந்த 6 மாதங்களாக நிதி நெருக்கடி காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் துவங்கி அப்டேட்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் அதைக் கொண்டாடி வருகின்றனர். இந்த போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com