விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜீத் – ஆரவ்க்கு பேராபத்து! பிழைத்தது ஆண்டவன் அருள்!

Vidamuyarchi shooting accident
Vidamuyarchi shooting accident

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் குறித்த அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் சமயத்தில்  இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

அஜித்தின் விடாமுயற்சி:

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர்  மகிழ் திருமேனி இயக்கும் படம் தான் விடாமுயற்சி. இப்படமானது ஆக்‌ஷன் ஜானரில் உருவாகி வருகிறது. இதனால் படம் முழுக்க சண்டைக் காட்சிகளுடன் சில கார் சேஸிங் காட்சிகளும் நிச்சயமாக இடம்பெறும் என கூறப்பட்டுவந்த நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட  வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களை பதற வைத்துள்ளது.  அந்த வீடியோவில் நடிகர் அஜித் காரை ஓட்ட அவருக்கு  அருகே ஆரவ் உள்ளார். இருவரும் பயணிக்கும் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையிலிருந்து பிரண்டு உருண்டு கவிழ்கிறது. இந்த விபத்து நடந்ததும் “Are u ok… Are u ok..” என ஆரவ்-இடம் அஜித் பதற்றத்துடன் கேட்கும் ஆடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. அதன் பின்னர் கார் கவிழவும் படக்குழுவினர் ஓடிச் சென்று அஜித்தையும் ஆரவ்வையும் பத்திரமாக மீட்டு எடுக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ப்ரியா பவானி சங்கர் Crush இவர்தானா?
Vidamuyarchi shooting accident

இருவரும் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர்பிழைத்துள்ளனர். சென்ற நவம்பர் மாதம் (2023) நேர்ந்த இந்த விபத்துக் குறித்த வீடியோவை நடிகர் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த பயங்கரமான ஸ்டண்ட் காட்சியின் வீடியோவானது பாரப்போரின் நெஞ்சை பதறவைக்கிறது.

ஆரவ்வின் எக்ஸ் தளப்பதிவு:

நடிகர் அஜீத்தோடு காரில் அருகில் அமர்ந்திருந்த ஆரவ் இந்த வீடியோ வெளியீட்டைத் தொடர்ந்து, விபத்து குறித்து தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் “இந்த விபத்திலிருந்து இவருவருமே மயிரிழையில் உயிர் பிழைத்தோம். இதற்காக இறைவனுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com