ஆலியா பட்டின் புது பெயர் இதுதான்… ரன்பீர் கபூர் Red Flag என்று ரசிகர்கள் விமர்சனம்!

Alia Bhatt and Ranbir kapoor
Alia Bhatt and Ranbir kapoor
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

ஆலியா பட்டின் பெயரை ரன்பீர் கபூர் மாற்றச் சொல்லி வற்புறுத்தியதால் அவர் தனது பெயரை மாற்றியுள்ளாராம்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியாபட் படங்களிலும் குடும்ப வாழ்க்கையிலும் பிஸியாகவுள்ளார். இவர் ஒரு ஆடை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருக்கிறார். 2022ம் ஆண்டு ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இவருக்கு ரஹா என்ற குழந்தையும் உள்ளது.

ஆலியா கணவர் ரன்பீர் கபூர் இறுதியாக அனிமல் படத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரத்தைப் போல்தான் அவர் நிஜத்திலும் நடந்துக் கொள்வார் என்று நெட்டிசன்கள் பகிர்ந்து வந்தனர்.

இதனையடுத்து அவர் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக குடி, மாமிசம் போன்ற பழக்கங்களை விட போவதாக சொன்னார். மேலும் தனது மகள், ரஹாவுக்காக சிகரெட் பழக்கத்தையும் விட்டுவிட்டதாக சொன்னார்.

பொதுவாகவே ரன்பீர் கபூர் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். இதற்கு முன்னதாக தீபிகா படுகோன், கத்ரினா கைஃப் ஆகியோர் விவகாரத்தில் சிக்கிக்கொண்டார். பின்னர்தான் ஆலியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஆலியாவை மதிக்காமல், டாமினேட் செய்கிறார் என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே பகிரப்பட்டு வந்தன.

இந்தநிலையில்தான் தற்போது ஒரு புதிய தகவல் வந்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ஆலியா பட் தனது பெயரை மாற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதாவது ஆலியா பட் என்ற தனது பெயரை ஆலியா பட் கபூர் என்று மாற்றியுள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சோபியா லோரன் - உலகின் அழகிய பெண் எனும் சிறப்பு பெற்ற இத்தாலிய நடிகை!
Alia Bhatt and Ranbir kapoor

நடிகை ஆலியா பட் தனது பெயரை மாற்றியுள்ள செய்தி தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

திருமணமாகி குழந்தைப் பிறந்த பிறகு இத்தனை ஆண்டுகள் கழித்து ஆலியா பட் என்றிருந்த தனது பெயரை தற்போது அவர் மாற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதை தொடர்ந்து, ரன்பீர் வற்புறுத்தலின் பெயரில் ஆலியா பெயரை மாற்றியுள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரன்பீர் ஒரு red flag என்று மீண்டும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

 

logo
Kalki Online
kalkionline.com