சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.
SSaP
3 என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான சிவகார்த்திகேயன், மெரினா, மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என்று படிபடியாக நல்ல படங்களில் நடித்து திரைத்துறையில் சாதித்தவர். அந்தவகையில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான அமரன் படம் 350 கோடி வசூல் செய்தது. ஒரு மாபெரும் ஹிட்டைக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
கோட் படத்தின் தளபதி விஜய் துப்பாக்கியை பிடிங்க சிவா என்று சிவாவிடம் துப்பாக்கியை எந்த நேரத்தில் கொடுத்தார் என்று தெரியவில்லை. இந்த நிகழ்வுக்கு பின் வெளியான சிவகார்த்திகேயனின் அடுத்த படமே ஹிட்டானது.
இதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். பின் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிவா நடிக்கவுள்ளார்.
இப்படி பெரிய பெரிய இயக்குநர்களுடன் சிவகார்த்திகேயன் கைக்கோர்க்கிறார். இந்த அத்தனைப் படங்களும் அதிக வசூல் ஈட்டும், அதாவது 150 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர்கள் கணிக்கின்றனர்.
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்தபோது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். ஆனால், அவர் நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் பல சிக்கல்களை எதிர்க்கொள்ள வேண்டியதாயிற்று. பல ரூமர்ஸ் இவரைச் சுற்றி வந்தன. அதுமூலம் சில ரசிகர்கள் இவரை காரணமே இன்றி ட்ரோல் செய்ய தொடங்கினர். ஆனால், அதையும் மீறி அவர் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார் என்பதே பாராட்டிற்குரிய விஷயமாகும்.
அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். முகுந்தன் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இது கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகி ஹிட் அடித்தது.
இந்நிலையில் இந்தப்படம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக கலாச்சார திரைப்பட விருது விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது.