அமீர்கான் இந்திய சினிமாவின் மிகவும் முக்கியமான நபர். பல ஹிந்தி படங்களில் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். லால் சிங் சத்தா மற்றும் Forrest gump போன்ற படங்களில் நடித்தார். அந்த ஃப்லாப் படங்களுக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார். ஆனால் சிட்டாரே ஜமீன் பர் படத்தின் கதை பிடித்துப்போய் அந்த படத்தில் நடித்தார். அந்தவகையில் சமீபத்தில் அமீர் கான் நடித்த சிட்டாரே ஜமீன் பர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை முதலில் அமீர் கான் தயாரிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்க முடிவு செய்தனர். அதற்காக சிவகார்த்திகேயனிடமே முதலில் பேசப்பட்டது. ஆனால், கதை டிஸ்கஷன் சென்ற அமீர்கானுக்கு கதை மிகவும் பிடித்துப்போனதால் அவரே நடித்தார். அதற்காக சிவகார்த்திகேயனிடம் கூட மன்னிப்புக் கேட்டார். இப்படியான நிலையில், அமீர்கான் தனது மகன் குறித்த ஒரு தகவலை கொடுத்திருக்கிறார்.
"என் மகன் இன்னும் கார் கூட வாங்கவில்லை. கார் வைத்துக்கொள் என்று சொல்லி எனக்கு அலுத்துவிட்டது. அவன் எப்போதும் ஸ்லீப்பர் பஸ்ஸில் தான் பயணிக்கிறான். அதுதான் அவனுக்கு பிடித்திருக்கிறதாம். அவன் மிகவும் எதார்த்தத்தை விரும்புகிறான். வெளியூர் சூட்டிங்கிற்கு விமானத்தில் போவதற்கு கூட பேருந்தில் பயணித்துதான் செல்கிறான்.” என்று சிட்டாரே ஜமீன் பர் பட ப்ரோமோஷனில் பேசினார்
அமீர்கான் மகன் ஜுனைத் கான் பாலிவுட்டில் வெளியான மகாராஜ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்களுக்கென தனி ஜெட் வாங்கிக்கொள்ளும் இந்த திரையுலகில், 2000 கோடி மதிப்பு சொத்தின் சொந்தக்காரர் பேருந்தில் செல்ல விருப்பப்படுவது அவரின் தனித்துவத்தை காட்டியுள்ளது. இது ரசிகர்களுக்கும் ஒருவித ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதுடன், அவரே போகிறார் நமக்கென்ன என்ற புரிதலையும் ஏற்படுத்துகிறது.