பிரஷாந்த் நடிப்பில் ‘அந்தகன்’ திரைப்படம்: சில சுவாரசியத் துளிகள்!

அந்தகன்
அந்தகன்
Published on

நீண்ட இடைவெளிக்குப் பிறகு டாப் ஸ்டார் பிரஷாந்தின் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அந்தகன்.’ இந்தப் படத்தில் பிரஷாந்த் ஒரு பியானோ கலைஞனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் சுவாரசியத் தகவல்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

* கடந்த 2002ம் ஆண்டு ஒரு பியானோ கலைஞனை மையப்படுத்தி, ‘The pianist’ என்ற போலந்து மொழி திரைப்படம் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இது ஹிட்லர் செய்த கொடுமைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.

* ‘அந்தகன்’ திரைப்படத்தில் பிரஷாந்த்தை ஒரு பியானோ கலைஞராக இயக்குநர் தியாகராஜன் உருவாக்க, ‘The pianist’ படமும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

* பிரஷாந்த் சிறு வயது முதலே பியானோ கற்றுக்கொண்டுள்ளார். லண்டனில் உள்ள ஒரு இசை பள்ளியில் பியானோ பயிற்சி பெற்று சான்றிதழும் பெற்றுள்ளார்.

* பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் சினிமா படம் இயக்கி பல வருடங்கள் ஆகி விட்டன. அதனால் இன்றைய ட்ரெண்ட்டிற்கு ஏற்றாற்போல் அவரால் படம் எடுக்க முடியாது என்று பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால், அவர்களின் கருத்துகளைப் பொய்யாக்கி விட்டு, ‘அந்தகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

* ஹிந்தியில் 2018ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற, ‘அந்தாதூன்’ திரைப்படத்தின் ரீ மேக்தான் ‘அந்தகன்’ திரைப்படம். அடுத்த ஆண்டே இப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரீ மேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

அந்தகன் படத்தில் பிரஷாந்த் - சிம்ரன்
அந்தகன் படத்தில் பிரஷாந்த் - சிம்ரன்

* தமிழில் இந்தப் படத்தின் ரீ மேக் உரிமையை வாங்க பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில் தனது மகனுக்காக தியாகராஜன்  போராடி தமிழ் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார்.

* ‘ராஜபார்வை’ திரைப்படத்தில் கமல், ‘காசி’யில் விக்ரம், இவர்களுக்குப் பிறகு பார்வையற்ற கதாபாத்திரத்தில், ‘அந்தகன்’ திரைப்படத்தில் பிரஷாந்த் நடித்திருப்பதாக சொல்கிறார்கள் விமர்சகர்கள்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம் - அந்தகன் - கதை புரியாத திரைக்கதை சுவாரசியம்!
அந்தகன்

* கடந்த 2000ம் ஆண்டில் வெளியான, ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்தில் வில்லியாக நடித்திருந்தார் சிம்ரன்.

* 24 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரஷாந்துடன் மீண்டும் ‘அந்தகன்’ திரைப்படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார் சிம்ரன்.

* ‘அந்தகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், இப்படத்தில் இடம்பெறும், பிரஷாந்த் - பிரியா ஆனந்த் நெருக்கமான காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

* பிரஷாந்த் படம் என்றாலே பாடல்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால், சந்தோஷ் நாராயணன் இசையில் வந்துள்ள ‘அந்தகன்’ படத்தில் ஒரு பாடல் கூட சிறப்பாக இல்லை. மனனம் செய்து ஒப்புவிப்பது போல உள்ளது.

எது எப்படியோ, பல நிறைகளுடனும் ஓரிரு  குறைகளுடன் வெளிவந்துள்ளது ‘அந்தகன்’ திரைப்படம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com