ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கும் யாத்ரா 2.. ட்ரைலர் வெளியானது!

ஜீவா
ஜீவா
Updated on

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கும் யாத்ரா 2 படத்தின் ட்ரைலர் வெளியானது.

ஆந்திரா அரசியலில் மாபெரும் ஆளுமையாக விளங்கியவர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி. ஆந்திராவின் பட்டி தொட்டி எங்கும் ஒய்எஸ்ஆருக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. இந்த மரியாதையே ஓ எஸ் ஆர் மரணத்திற்கு பிறகு அவரின் மகனான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக காரணமாக அமைந்தது.

இவ்வாறு ஆந்திரா அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய ஒய் எஸ் ஆரின்டைய வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சித்தார் மஹி வி ராகவ். பிறகு மஹி பி ராகவ் இயக்கத்தில் ஒய் எஸ் ஆர் வாழ்க்கை வரலாறு தழுவி யாத்ரா படம் எடுக்கப்பட்டது. இதில் ஓ எஸ் ஆர் தோற்றத்தில் மம்முட்டி நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஆந்திராவில் தற்போது தந்தையை மிஞ்சிய மகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. ஜெகன்மோகன் ரெட்டியினுடைய செயல்பாடு ஆந்திராவில் அவருக்கான தனி இடத்தை தற்போது உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் மஹிவி ராகவ் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்றை தழுவி யாத்ரா 2 பாகத்தை எடுக்க முடிவு செய்தார்.

இந்த படத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தோற்றத்தில் நடிகர் ஜீவா நடிக்க ஒப்பந்தமானார். இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இறப்பில் இருந்து தொடங்கும் படம், ஜெகன்மோகன் ரெட்டியின் எழுச்சி, யாத்திரை, அவரின் வெற்றி என அனைத்தையும் படமாக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com