
சமூக வலைதளங்களில் அடிக்கடி சினிமா பிரபலங்களை பற்றிய வதந்திகள் ஊலா வந்த வண்ணம் இருக்கும். அது உண்மையா, பொய்யா என்பது கூட தெரியாமால் இந்த மாதிரி செய்திகளை படிக்கவே பலரும் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி இணையத்தில் பல வேகமாக வைரலாகி வந்தது. அது வேறு ஒன்றும் இல்லீங்க.. நம்ம இசையமைப்பாளர் அனிருத்தும், சன் நெட்வொர்க் கலாநிதி மாறனின் மகளும், SRH அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனும் காதலித்து வருவதாவும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. இரண்டு தரப்பிலும் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்காததாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், அனிருத்தின் ரசிகர்கள் இந்த கிசுகிசுக்களை நம்பினர். மேலும் அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் அதைப் பற்றிய தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், திருமணம் குறித்து பரவி வரும் வதந்திகள் குறித்து மௌனம் கலைத்து தனது எக்ஸ் பக்கத்தில் தனது ஸ்டைலில் நச் ரிப்ளை கொடுத்துள்ளார்.
அதாவது, "திருமணம் ஆ? ஹாஹா.. சில்லா இருங்க கய்ஸ், தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீங்க ப்ளீஸ்." என்று பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில் இதற்கு ரசிகர்களும் அப்போ அது உண்மை இல்லையா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் உச்ச நட்சத்திரங்கள் பட்டியலில் அனிருத் பெயர் கட்டாயம் இருக்கும். இவர் இசையமைத்த முதல் திரைப்படமான ‘3’ படத்தில் வரும் ‘வொய் திஸ் கொலவெறி டி’ என்ற பாடலின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தார். பாடகர் மற்றும் இசையமைப்பாளராக இவர் தனது சென்சேஷனல் இசையால் ஒட்டு மொத்த தென்னிந்தியாவையும் ஆண்டு கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவருக்கு திருமணம் என்று தகவல்கள் இணையத்தில் உலா வந்ததும் பலரும் நம்பிவிட்டார்கள். அதுவும் அனிருத்துக்கும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன் என இருவரும் காதலில் உள்ளார்கள் என்று வதந்திகள் பரப்பப்பட்டதால், பலரும் நம்பிவிட்டார்கள்.
தமிழ், தெலுங்கு மற்றும் தற்போது இந்தி சினிமாவிலும் பணியாற்றி வரும் அனிருத், நடிகர் ரவி ராகவேந்திரா மற்றும் நடனக் கலைஞர் லட்சுமியின் மகனும், உறவின் முறையில் ரஜினிகாந்தின் மருமகனுமாவார்.
அனிருத் தற்போது தமிழில் ரஜினிகாந்தின் கூலி மற்றும் ஜெயிலர் 2, விஜய்யின் ஜன நாயகன், பிரதீப் ஆண்டனியின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் வேறு மொழிப் படங்களிலும் கமிட் ஆகியுள்ள இவர் தற்போது பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.