மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?

Anushka Shetty
Anushka Shetty

ஃபேன்டஸி த்ரில்லர் படமாக உருவாக உள்ள கத்தனார்-தி வைல்ட் சோர்சரர் படத்தின் மூலம் அனுஷ்கா மலையாள சினிமாவில் நுழைந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷெட்டி, முதல் முறையாக மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அதுவும் முதல் படத்துக்கே பல கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு தெலுங்கு சினிமா மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் அனுஷ்கா ஷெட்டி. முதல் படத்தில் இருந்தே மக்களின் அமோக வரவேற்பை பெற்ற அனுஷ்காவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.

சில தனிப்பட்ட காரணங்களுக்காக சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலி ஷெட்டி மூலம் தெலுங்கில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் நிசப்தம் ஆகிய தோல்விப் படங்களுக்கு பிறகு அனுஷ்கா லாபம் தரும் நடிகையாக மாறவும் உதவியது. இந்த நிலையில் அனுஷ்கா மலையாள திரையுலகில் எண்ட்ரி கொடுக்க உள்ளார். ஃபேன்டஸி த்ரில்லர் படமாக உருவாக உள்ள கத்தனார்-தி வைல்ட் சோர்சரர் படத்தின் மூலம் அனுஷ்கா மலையாள சினிமாவில் நுழைந்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
லோகேஷின் பிஸி லைனப்பில் தெலுங்குப் படமும் உள்ளதா?
Anushka Shetty

75 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த படம் மலையாள சினிமா வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக உள்ளது. இப்படத்திற்கு கத்தனார் எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனுஷ்கா ரூ.5 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அந்த வகையில் அவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். பாகுபலிக்கு முன் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com