லோகேஷின் பிஸி லைனப்பில் தெலுங்குப் படமும் உள்ளதா?

Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj

லோகேஷின் பிறந்தநாளையடுத்து பிரபலங்களும் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து கர்நாடகாவின் KVN தயாரிப்பு நிறுவனம் 'எங்கள் இயக்குனருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்' என்றுப் பதிவிட்டது ரசிகர்களை உற்சாகம் கலந்த குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் லியோ படத்தையடுத்து ஒரு பிஸி லைனப்பை வைத்திருக்கிறார். அதில் முதலாவதாகத் தலைவர் 171 என்றழைக்கப்படும் ரஜினிகாந்தின் 171வது படமாகும். இந்தப் படத்தை லோகேஷ் இயக்கப்போவதாகச் சென்ற ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். மேலும் இந்தப் படத்திற்கான ஸ்க்ரிப்ட் வேலைகளை லோகேஷ் செய்துக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து கைதி 2, ரோலக்ஷ், இரும்பு கை மாயாவி, விக்ரம் 2 ஆகிய படங்கள் லைனப்பில் உள்ளன.

இந்த லைனப்பில் தற்போது எதிர்பாராவிதமாக இன்னொரு படமும் இணைந்துள்ளது. கர்நாடகா தயாரிப்பு நிறுவனமான KVN Production லோகேஷ் கனகராஜுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் யாஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தத் தயாரிப்பு நிறுவனம்தான் லோகேஷுக்குத் தனியாகப் பிறந்தநாள் போஸ்டர் வெளியிட்டு அதில் எங்கள் இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்றுக் குறிப்பிட்டு வெளியிட்டிருந்தது.

ஆகையால் இந்தப் படம் லோகேஷின் தெலுங்கு அறிமுகம் என்பது நிரூபனமானது. மேலும் இப்படத்தில் பிரபாஸ் நடிப்பார் என்றுக் கூறப்படுகிறது. மேலும் KVN தயாரிப்பு நிறுவனத்தில் லோகேஷ் கதை கூறிவிட்டதாகவும் அந்தக் கதை அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆகையால் லோகேஷின் லைனப்பில் இணைந்த இந்தப் புது படத்தை அவர் தலைவர் 171 மற்றும் கைதி 2 ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் KVN production கோலிவுட் படங்களைத் தயாரிக்க முன்வருவதாகவும் லோகேஷின் ரோலஷ் படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
கல்யாண தேதி சொன்ன அமீர் - பாவனி... குவியும் வாழ்த்துக்கள்!
Lokesh Kanagaraj

லோகேஷ் உருவாக்கிய LCU விக்ரம் 2 படத்துடன் முடிவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து KVN production தயாரிப்பில் லோகேஷ் இயக்கும் படத்தின் அப்டேட் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com