அடுத்த மாதம் ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள் லிஸ்ட் இதுதான்... ஏப்ரல் மாதம் ரெடியா இருங்க!

April 2024 release movies
April 2024 release movies

ஒவ்வொரு மாதமும் படங்கள் எக்கச்சக்கமாக வெளியாகி வருகின்றன. அந்தவகையில் அடுத்த மாதம் ஏப்ரலில் என்னென்ன படங்கள் வெளியாகு என்று பார்க்கலாம்.

புத்தாண்டு தொடங்கியதில் இருந்து ஜனவரி, பிப்ரவரி மாதம் சில படங்கள் மட்டுமே வெளியாகி வெற்றி பெற்றன. பல படங்கள் எதிர்பார்த்தும் வெற்றி பெறாமல் போனது. பொங்கலுக்கு வந்த படங்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்ற நிலையில் பிப்ரவரி மாதம் வெளியான லவ்வர் படம் மட்டுமே ஓரளவு வசூலை குவித்தது.

தொடர்ந்து மலையாள படங்கள் தான் வெற்றியை அள்ளி குவிக்கிறது என்றே சொல்லலாம். அதனால் மார்ச் மாதம் பெரியளவில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் தேர்தல் வரும் வேளையில் என்னென்ன படங்கள் வெளியாகு என்று பார்க்கலாம். பள்ளிக்கும் விடுமுறை விடப்படுவதால் அடுத்தமாதம் சில படங்களுக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்வன் (Kalvan):

பிவி ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் கள்வன். இதில் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார். இப்படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பேமிலி ஸ்டார் (Family Star):

பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் பேமிலி ஸ்டார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இப்படமும் வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ரோமியோ (Romeo):

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து ரோமியோ திரைப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தற்போது இருந்தே ஹைப் இருப்பதால் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படியுங்கள்:
புஷ்பா இயக்குனருடன் கைக்கோர்க்கும் ராம் சரண்.. வரப்போகும் மாஸ் கூட்டணியின் படம்!
April 2024 release movies

டியர் (Dear):

ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள டியர் படமும் ஏப்ரல் 11ஆம் தேதி தான் வெளியாகவுள்ளது. இப்படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.

ரத்னம் (Rathnam):

ஹரி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இந்த படம் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டாமாக ரிலீஸ் ஆக உள்ளது.

அரண்மனை 4 (Aranmanai 4):

ஏற்கனவே 3 பாகங்களாக பேய்களை கொண்டு வரும் சுந்தர் சி தற்போது 4ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படமும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தான் வெளியாகவுள்ளது. இதில் ஹீரோயினாக தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com