ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி.. பூஜையுடன் தொடக்கம்.. ஹீரோயின் யார் தெரியுமா?

ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன்
ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன்
Updated on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது. இந்த படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் என்பதால் பொங்கலுக்கு நன்றாக கல்லா கட்டியது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படம் வெளியாகும்.

தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் நாளை வெளியாகவுள்ள நிலையில், அடுத்த படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளது.

சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில், சென்னையில் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பூஜை எளிமையாக நடந்தது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மிருணாள் தாக்கூர் இதில் நாயகியாக நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் திருப்பதி பிரசாத் படத்தைத் தயாரிக்கிறார். பொங்கலுக்கு வெளியான அயலான் படம் நல்ல வரவேற்பைபெற்ற நிலையில், அடுத்தடுத்த பட அப்டேட் வெளியாவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com