

சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘அரசன்’ திரைப்படம் மீண்டும் வேகம் பிடித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட BTS புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், ‘Arasan Back in Action’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புதிய அப்டேட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிம்புவும் வெற்றிமாறனும் முதன்முறையாக இணையும் படம் என்பதே ‘அரசன்’ மீதான எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. வெற்றிமாறன் தனது படங்களில் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதால், சிம்புவை அவர் எந்த வகையான கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்தப் போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெற்றிமாறனின் இயக்கத்தில் ஏற்கெனவே ‘விடுதலை’ திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி, மீண்டும் அவருடன் இணைந்திருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. சிம்பு–விஜய் சேதுபதி ஆகிய இரு முன்னணி நடிகர்களும் ஒரே படத்தில் இடம்பெறுவது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, யோகி பாபு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ‘அரசன்’ ஒரு வலுவான நட்சத்திரக் கூட்டணியைக் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.
‘அரசன்’ திரைப்படம் ‘வடசென்னை’ உலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டு வருவதும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
‘வடசென்னை’ திரைப்படத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்களுடன் தொடர்புடைய அம்சங்கள் இப்படத்திலும் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. குறிப்பாக ஆண்ட்ரியா மீண்டும் அந்த உலகத்துடன் தொடர்புடைய கதாபாத்திரத்தில் தோன்றுவது குறித்த தகவல்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
வெற்றிமாறனின் யதார்த்தமான திரைக்கதை, சிம்புவின் நடிப்பு, விஜய் சேதுபதியின் அனுபவம் என பல அம்சங்கள் இணைந்திருப்பதால், அரசன் படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பேசுபொருளாக இருந்து வருகிறது.
படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக படத்தின் புதிய புகைப்படங்கள், கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புத் தளம் பரபரப்பாகியிருப்பது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
மீண்டும் வேகம் பிடித்துள்ள ‘அரசன்’. சிம்புவும் வெற்றிமாறனும் இணைந்து உருவாக்கப் போகும் இந்த புதிய உலகம் திரையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அரசன் படத்தின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் அது வடசென்னை திரைப்படத்தின் உலகத்துடன் கொண்டிருக்கும் தொடர்பு. வடசென்னையில் "சந்திரா "என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா" அரசன் படத்திலும் அதே கதாபாத்திரத்தை தொடர்வதாக சமீபத்தில் கூறியுள்ளார். இதனால் இரு படங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து ரசிகர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது..
இதற்கிடையில் "அரசன்" படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும் இதில் விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கும் நிலையில் இந்த செய்தி படத்தின் அடுத்த கட்டத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
குறிப்பாக சிம்பு, விஜய் சேதுபதி ஆண்ட்ரியா ஆகியோரின் கதாபாத்திரங்கள் எந்தப் புள்ளியில் ஒன்றோடொன்று இணைகின்றன என்பது ரசிகர்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. வடசென்னை உலகில் ஏற்கனவே அறிமுகமான ஒரு கதாபாத்திரம் புதிய கதையில் மீண்டும் தோன்றுவது படத்தின் கதைக்களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது..
இவ்வாறு பழைய கதையின் தொடர்ச்சியை நினைவூட்டும் அம்சங்களும், புதிய கதாபாத்திரங்களும் இணைந்திருப்பதால் "அரசன் " திரைப்படம் வெறும் புதிய படம் என்ற எதிர்பார்ப்பைத் தாண்டி வெற்றிமாறனின் முந்தைய படைப்புகளுடன் தொடர்பு படுத்திப் பார்க்கப்படும் படமாக மாறியுள்ளது..
திரையில் அரசனாக சிம்பு எப்படி மிளிரப் போகிறார் என்பதைக் காண ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் படம் அரசன்!
வாசகர்கள் தமிழ் சினிமாவின் மாபெரும் கூட்டணியின் திரைக்கதை உத்திகள் மற்றும் கதாபாத்திரங்களின் ஆழமான தொடர்புகளைப் புரிந்து கொண்டு சினிமா உலகில் புதுப்புது தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.