இனி சினிமா பாடல்களை பாடப் போவதில்லை! கரியரின் உச்சத்தில் ஓய்வை அறிவித்த அர்ஜித் சிங்..!

பிரபல பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங் தனது 38 வயதில் ஓய்வை அறிவித்து கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Arijit Singh
Arijit Singhimage credit-filmibeat.com
Published on

பிரபல பாலிவுட் பாடகரும், இசையமைப்பாளருமான அர்ஜித் சிங்(38) தனது மெலோடி பாடல்கள் மூலம் இளம் தலைமுறையினரிடம் பிரபலமானார். வசீகரமான குரலும் அழுத்தம் திருத்தமான பாடல் உச்சரிப்பாலும் பாலிவுட் மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்ட பாடகர் அர்ஜித் சிங், ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். பாலிவுட்டின் இளம் தலைமுறை பாடகர்களில் மிகவும் பிரபலமான அர்ஜித், தனது புகழின் உச்சத்தில் இருக்கும்போது இந்த ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் முதல் கோலிவுட் வரை தனது மயக்கும் வசீகரமான குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த அர்ஜித் சிங். சினிமாதுறையில் நுழைவதற்கு முன் விளம்பரங்கள், செய்தி சேனல்கள் மற்றும் வானொலி நிலையங்களுக்கு இசை மற்றும் பாடல்களை தயாரிக்க தொடங்கினார். பிற இசையமைப்பாளர்களுடன் பணி புரிய தொடங்கினார்.

2005-ல் நடந்த ரியாலிட்டி ஷோ மூலம் அர்ஜித் சிங் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 'மர்டர் 2' படத்தில் இடம்பெற்ற 'ஃபிர் மொஹபத்' என்ற பாடலைப் பாடி பாலிவுட்டில் அறிமுகமானார்.

2013-ல் வெளியான ஆஷிக் 2 என்ற திரைப்படத்தில் தும் ஹி கோ(Tum Hi Ho) என்ற பாடலைப் பாடினார். இது அவரை உலகளவில் பெரியளவில் புகழைச் சேர்த்து, பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுத் தந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பின்னணி பாடகராக வலம் வந்த அர்ஜித் சிங், சன்ன மேரையா(Channa Mereya), கபீரா, கேசரியா உள்ளிட்ட இந்தி பாடல்கள் மூலம் மொழிகளை கடந்து இளம் தமிழ் ரசிகர்கள் மனத்திலும் நீங்கா இடம் பிடித்தார். இவர் தமிழில் சூர்யா நடித்த 24 படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘நான் உன் அருகினிலே’ என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் டூயட் பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மொழிகளில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட வெற்றிப் பாடல்களை அவர் பாடியுள்ளார். அவரது பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் தான். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்காக பல பாடல்களையும் பாடியுள்ள இவர், கடந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் பெற்றார்.

இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ‘இத்தனை வருடங்களாக எனக்கு அன்பை கொடுத்த எல்லோருக்கும் நன்றி. நான் ஓய்வு பெற விரும்புகிறேன். பின்னணி பாடல் துறையில் இருந்து மட்டுமே விலகுகிறேன், இசைத் துறையில் நீடிப்பேன். இது ஒரு அற்புதமான பயணம்" என அரிஜித் சிங் பதிவிட்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறாரா கமல்..? ஒரு பெரிய வெற்றியுடன் விடைபெறத் திட்டம்..!
Arijit Singh

அர்ஜித் சிங்கின் இந்த முடிவு சினிமா பிரபலங்களையும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com