லியோவை தொடர்ந்து விடாமுயற்சியிலும் ஆக்‌ஷன் கிங்.. வைரலாகும் போட்டோ!

விடாமுயற்சி
விடாமுயற்சி
Published on

திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் ஆண்டுக்கு ஒரு படம் நடித்து வருகிறார். கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். வங்கி கொள்ளை கான்செப்டில் உருவான இந்த படம் மெஹா ஹிட்டானது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டிலேயே நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கூட விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பினார். இங்கு வெள்ளத்தில் சிக்கி கொண்ட அவர், தற்போது மீண்டும் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் கூட இணையத்தில் வைரலானது.

சத்தமில்லாமல் அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங் நடைபெற்று வருவதால் படத்தின் எந்த வித அப்டேட்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் வில்லனாக நடிப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவ தற்போது மற்றொரு படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், அஜித், ஆரவ் மற்றும் அர்ஜூன் ஒன்றாக அமர்ந்து இருக்கிறார்கள். இதன் மூலம் நடிகர் அர்ஜுன் விடாமுயற்சி படத்தில் நடிப்பது உறுதியானது. சமீபத்தில் வெளியான விஜய்யின் லியோ படத்தின் அவர் நடித்திருந்ததை தொடர்ந்து தற்போது அஜித்தின் படத்திலும் நடித்து வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com