அருண் விஜய்க்கு என்னாச்சு? வெளியான போட்டோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

arun vijay
arun vijay

நடிகர் அருண் விஜய் வெளியிட்டுள்ள புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரபல் நடிகர் விஜயக்குமாரின் மகனான அருண் விஜய் தனக்கென தனி ரசிகர்கள் பட்டளத்தை கொண்டுள்ளார். சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வெற்றிபடங்களை கொடுத்து வருகிறார்.

தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். சூர்யாவை வைத்து இந்தப் படத்தை இயக்கிவந்த பாலா, அந்தப் படம் டிராப் ஆனதை தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த 12ம் தேதி பொங்கலையொட்டி வெளியான மிஷன் சாப்டர் 1 படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில், மிஷன் படத்திற்கு மக்கள் தரும் ஆதரவிற்கும், மிஷன் படத்தின் வெற்றிக்கும் மக்களுக்கு நன்றி கூறும் வகையில் நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஷூட்டிங் ஸ்டண்ட்டின் போது ஏற்பட்ட எலும்பு முறிவு மற்றும் தசைநார் கிழிகளால் 2மாதங்களாக பெரும் வழிகளை அன்பவித்து வந்ததகவும் அந்த வழிகளை மிஷன் படத்தின் வெற்றியும் மக்களின் ஆதரவும் மறக்கடித்து விட்டது என்று தான் வழியால் அனுபவித்த புகைப்படங்களுடன் பதிவை வெளியிட்டுள்ளார் அருண் விஜய். இதனை பார்த்த ரசிகர்கள் அருண் விஜய்க்கு என்னாச்சு என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com