அருண் விஜயின் 'அச்சம் என்பது இல்லையே'!

அருண் விஜய்
அருண் விஜய்

அருண் விஜய் - எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அச்சம் என்பது இல்லையே'. ஸ்ரீ ஷீரடி சாய் மூவிஸ் பேனரில் ராஜசேகர் மற்றும் சுவாதி தயாரிக்கும் இப்படத்தை 'கிரீடம் ', 'பொய் சொல்லப் போறோம்', 'மதராசபட்டினம்', 'தெய்வத்திருமகள்' , 'தாண்டவம்', 'தலைவா', 'சைவம்', 'இது என்ன மாயம்' ஆகிய வெற்றி படங்களை இயற்றிய ஏ. எல். விஜய் இயக்கியுள்ளார்.

எமி ஜாக்சன் கடைசியாக 2018 இல் வெளியான ‘2.o’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்தார், பின்னர் அவர் கர்ப்பமாக இருந்ததால் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். 'அச்சம் என்பது இல்லையே' ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கும் படம்.

மலையாள நடிகை நிமிஷா சஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டண்ட் சில்வா ஆக்‌ஷன் கோரியோகிராஃபிக் செய்ய கேவ்மிக் யு ஆரி மற்றும் சந்தீப் கே விஜய் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

'அச்சம் என்பது இல்லயே', லண்டன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள சில எதிர்பாராத ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட ஹை-ஆக்டேன் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் என்று கூறப்படுகிறது.

தற்போது நடிகர் அருண் விஜய் தனது சமூகவலைத்தளங்களில் எமி ஜாக்சன் மற்றும் இயக்குநர் விஜய்யுடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com