Mission Chapter 1 Movie
Mission Chapter 1 Movie

ஹிட்டான அருண் விஜய் மிஷன் சாப்டர் 1.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on

நடிகர் அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் விஜயக்குமாரின் மகனான அருண் விஜய் தனக்கென தனி ரசிகர்கள் பட்டளத்தை கொண்டுள்ளார். சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வெற்றிபடங்களை கொடுத்து வருகிறார்.

தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இதனிடையே விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த 12ம் தேதி பொங்கலையொட்டி வெளியான மிஷன் சாப்டர் 1 படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பொங்கலுக்கு இந்த வருடம் நிறைய படங்கள் வெளியானதால், தொடக்கத்தில் அயலான், கேப்டன் மில்லர் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சில நாட்களுக்கு பின்னர், மிஷன் சாப்டர் 1 படம் ரசிகர்களுக்கு பிடித்துப் போகவே, அந்த படத்தை வெளியிட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தன.

ஆக்சன், எமோஷனல் ஜேனரில் வெளிவந்த இந்த படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அருண் விஜய்யுடன் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல் மற்றும் அப்பா மகள் சென்டிமென்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மிஷன் சாப்டர் 1 வரும் 16 ஆம் தேதியன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com